Saturday, October 17, 2009

மெல்ல மெல்ல மெல்ல

மெல்ல.. மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல.. சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல

மெல்ல....

உச்சி முதற்கொண்டு பாதம் வரை - இங்கு
ஓடிடும் மின்னலை என்ன சொல்ல...
மிச்சம் இருப்பதை நாளை என்று
மிச்சம் இருப்பதை நாளை என்று - நெஞ்சில்
மின்னிடும் ஆசையை என்ன சொல்ல

மெல்ல ....

அத்திப் பழ்ததுக்கு மேலழகு - உந்தன்
ஆசை பழத்துக்கு உள்ளழகு ...
தத்தித் தவிக்கின்ற பொன்னழகு
தத்தித் தவிக்கின்ற பொன்னழகு - உன்னைத்
தழுவத் துடிக்கின்ற பெண்ணழகு

மெல்ல ....

தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள ...
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்..
ஆடுகின்றாய்.. ஆடுகின்றாய்..

மெல்ல ....

மேலைத் திசையினில் போய் உறங்கும் - கதிர்
மீண்டும் வரும் வரை நம் உலகம் ...
காலைப் பொழுதினில் சிந்தனைகள்
காலைப் பொழுதினில் சிந்தனைகள் - மறு
மாலை வரும் வரை கற்பனைகள்

மெல்ல ....

ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த
ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்...
ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை
ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை
நாம் ஒன்று இரண்டு என்பதுமில்லை

மெல்ல ....


இன்பமே உந்தன் பேர்

படம் : இதயக் கனி
குரல் : டி.எம்.எஸ், பி.சுசீலா



இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி என் நெஞ்சில் ஆடும்
பருவக்கோடீய்......
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி உன் நெஞ்சில் ஆடும்
பருவக்கோடீய்......

இன்பமே....

சர்கரை பந்தல் நான்
தேன் மழை சிந்த வா
சர்கரை பந்தல் நான்
தேன் மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே
சாகச நாடகம் எங்கே
தேனோடு பால் தரும் செவ்விளனீர்களை
ஒறிரு வாழைகள் தாங்கும்
டேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்

இன்பமே....

பஞ்சணை வேண்டுமோ
நெஞ்சணை போதுமே
பஞ்சணை வேண்டுமோ
நெஞ்சணை போதுமே
கை விரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண
பொன்னோலி சிந்திடும் மெல்லிய டீபதில்
போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண் தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன

இன்பமே ....

மல்லிகை தோட்டமோ
வெண் பனி கூடமோ
மல்லிகை தோட்டமோ
வெண் பனி கூடமோ
மாமலை மேல் விளையாடும்
மார்பினில் பூங்குயிலாகும்
மங்கல வாதியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதிடில் ஆடும்

இன்பமே ....

ஆசை அன்பு இழைகளினாலே

படம் : வெள்ளிக்கிழமை விரதம்
குரல் : டி.எம்.எஸ், பி.சுசீலா,
இசை : சங்கர் கனேஷ்


ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை

ஆசை அன்பு இழைகளினாலே ....

வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளை போலவே
வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளை போலவே
எண்ணி பார்க்க ரெண்டு போதும் நம்மை போலவே
எண்ணி பார்க்க ரெண்டு போதும் நம்மை போலவே
மன கண்கள் அந்த கனவே காணுதே
நாம் காணும் இன்பம் நினைவாய் தோணுதே

ஆசை அன்பு இழைகளினாலே....

எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னை பற்றியே
எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னை பற்றியே
அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னை சுற்றியே
அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னை சுற்றியே
அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே
அது உன்னை போல சிரிப்பை மூட்டுதே

ஆசை அன்பு இழைகளினாலே ....


மங்கையரில் மகராணி

படம் : அவளுக்கென்று ஓர் மனம்
குரல் : எஸ்.பி.பாலா, பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்


மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி....

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்லத் தடைபோட

மங்கையரில் மகராணி ....

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவிபாட

மங்கையரில் மகராணி ....


உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

படம் : அவளுக்கென்று ஒரு மனம்


உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்


செந்தூர் முருகன் கோவிலிலே

படம் : சாந்தி
இசை : எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்

செந்தூர் முருகன் கோவிலிலே - ஒரு
சேதியை நான் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்

செந்தூர்....

என்னிரு கைகள் தூக்கியபோது
பெண்பார்க்க வந்தானம்மா...
பன்னிரு கையில் வாரி யணைத்துப்
பண்பாட வந்தானம்மா

செந்தூர்....

கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா ...
குங்குமம் சிவந்த கோதை இதழில்
ஒன்றேனும் தரலாமா

செந்தூர்....


நெஞ்சத்திலே நீ நேற்று

படம் : சாந்தி
குரல் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்


நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்....
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

நெஞ்சத்திலே ....

நூலிடை மீதொரு மேகலையாட
மாலைக்கனிகள் ஆசையில் வாட ...
ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கும் ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்கள் இரண்டில் நிம்மதி ஏது
நிம்மதி ஏது...நிம்மதி ஏது...

நெஞ்சத்திலே....

காவிரி ஆறென நீர் விளையாட
கன்னி மலர்கள் தேன்மழையாக ...
பாதி விழிகள் காதலில் மூட
பாலில் விழுந்த பழம் போலாட
நீ தரவேண்டும் நான் பெறவேண்டும்
நிலவில் ஆடும் நிம்மதி வேண்டும்
நிம்மதி வேண்டும்...நிம்மதி வேண்டும்...

நெஞ்சத்திலே ....

பூவுக்குள் ஒளிந்திருக்கும்

படம் : ஜீன்ஸ்
குரல் : உன்னி கிருஷ்ணன், சுஜாதா
இசை : AR ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து


பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும்....

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

கல்தோன்றி ...
பூவுக்குள் ஒளிந்திருக்கும் ...

பெண்பால் கொண்ட சிறுதீவு
கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

கல்தோன்றி ...
பூவுக்குள் ஒளிந்திருக்கும் ....


ஹைர ஹைரா ஹைரப்பா

படம் : ஜீன்ஸ்
குரல் : உன்னி கிருஷ்னன், பல்லவி
இசை : எ.ஆர்.ரஷ்மான்



எனக்கே எனக்கா...
எனக்கே எனக்கா
நீ எனக்கே எனக்கா
அஹ ஹாஹ
மதுமிதா மதுமிதா
ஹைர ஹைரா ஹைரப்பா
50 கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா
லிப்ட்டி-இல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைர ஹைரா ஹைரப்பா
பக்கெட் சிழே-இல் வென்னிலவு எனக்கே எனக்கா
ஃபஃஸில் வந்த பென் கவிதை எனக்கே எனக்கா

முத்தமழையில் நனஞ்சுக்கலாமா
கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
பட்டுப் பூவே குட்டித் தீவே
விரல் இடைதொட வரம் கொடம்மா

ஹைர ஹைரா...

அன்பே இருவரும் பொடினடையாக
அமெரிக்காவை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்புக் கம்பலம் விரித்து
ஐரோப்பாவில் குடிபுகுவோம்
நம் காதலை கவிபாடவே
ஷெல்ல்ய்-இன் ப்ய்ரொன்-நின் கல்லரைத்
தூக்கத்தைக் கலைத்திடுவோம்

வின்னைத்தாண்டி நீ வெலியில் குதிக்கிராய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாலமோ கொண்டாட்டமோ
காதல் வேரியில் நீ காற்றைக் கிழிக்கிராய்
பில்லை மனம் பித்தாகுமோ
என்னகுமோ ஏதாகுமோ

வாடைக் காற்றுக்கு வயசாச்சு
வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடியுகம் போனாலென்ன
காதலுக்கு எப்போதும் வயசாகாது

ஹைர ஹைரா

ஒஹ்...ஹொ ...ஒஹ் ...ஹொ

செர்ரிப் பூக்கலைத் திருடும் காற்று
காதில் சொன்னது ஈ லோவே யோஊ
க்ய்ப்ருச் மரங்கலில் தாவும் பரவை
என்னிடம் சொன்னது ஈ லோவே யோஊ
உன் காதலை நீ சொன்னதும்
தென்ரலும் பரவையும்
காதல் தோல்வியில் கலங்கியதே

ஒற்றைக் காலிலே பூக்கல் நிர்பது
உன் கூந்தலில் நின்ராடத்தான்
பூமாலையே பூச்சூடவா
சிந்தும் மழைத்துலி மன்னில் வீழ்வது
உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா

இதயம் துடிப்பது நின்ராலும்
இரண்டு நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கனம் என்னுயிர் தாங்காது

ஹைர ஹைரா .....


Friday, October 16, 2009

இளைய நிலா பொழிகிறதே

படம் : பயனங்கள் முடிவதில்லை
குரல் : எஸ்.பி.பாலா
இசை : இளையராஜா


இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா....

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா....

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா ....

ஆயிரம் தாமரை மொட்டுக்களே

படம் : அலைகள் ஓய்வதில்லை

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்..
இங்கிரண்டு ஜாதிமல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை..

ஆயிரம் தாமரை ....

ஹே.. கொத்துமலர் அமுதம் கொட்டும் மலரே
இங்குத்தேனை ஊற்று இது தீயின் ஊற்று..
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக்குடிக்கும்..

ஆயிரம் தாமரை ....

ஹே.. வீட்டுக்கிளியே கூண்டைவிட்டு தாண்டிவந்தியே..
ஒருகாதல் பாரம் ரெண்டு தோளில் ஏறும்..
புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை..
ஒன்றை ஒன்று சூடும் இது பொன்வேளை..
கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்..

ஆயிரம் தாமரை ....

மல்லிகையே மல்லிகையே

படம் : பெரிய வீட்டு பன்னைக்காரன்

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிரேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தங்காது இனி தாங்காது

மல்லிகையே....

சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே
சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே

ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே

மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா
மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா ...

மல்லிகையே ....

என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை
என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை
செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை

கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்
மனதினில் பாலும் இன்பதேனும் கலந்தோடும்
ஆடிபாடிதான் வரும் ஆசைத் தேறும் நீ ....

மல்லிகையே ....

நேற்று இல்லாத மாற்றம்

படம் : புதிய முகம்
குரல் : சுஜாதா
இசை : AR ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து


நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..

நேற்று....

கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்றுதானே காற்று வீடும் வரை

நேற்று....

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்
வாசம் இல்லாமலே காற்று வந்தாடலாம்
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?

நேற்று....

வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்

படம் : முதல் மரியாதை
இசை : இளையராஜா


ஏதோ மோகம் ஏதோ தாகம்

படம்: கோழி கூவுது
குரல் : கிருஷ்ண சந்தர், ஜானகி
இசை: இளையராஜா




ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே

ஏதோ மோகம்....

தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு

பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

ஏதோ மோகம் ....

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து

அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது

ஏதோ மோகம் ....


Saturday, October 10, 2009

ஓ மானே மானே மானே

படம் : வெள்ளை ரோஜா


ஓ மானே மானே மானே
உனைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே

ஆசை நெஞ்சின்
நான் போதைக்கொண்டேன்
தன்னாளே சொக்கிப்போனேன்
நானே நானே

ஓ மானே மானே மானே....

ஹேஏஏஏஏஏஏஏஏஏ..
காலை பனித்துளி
கண்ணில் தவழ்ந்திட
கனவுகள் மலர்கிறது

பார்வை தாமரை
யாரை தேடுது
பருவம் துடிக்கிற்து

ஆசையின் மேடை
நாடகம் ஆடும்

ஆயிரம் பாடல்
பாவையை தேடும்

நீ தேவன் கோவில் தேரோ
உன் தெய்வம் தந்த பூவோ
நீ தேனில் ஊறும் பாலோ
தென்றல் தானோ.. ஹோய்..

ஓ மானே மானே மானே....

ஹேய்ய்ய்ய்ய்..
நீலபூவிழி ஜாலம் தெரியுது
நினவுகள் இனிக்கிற்து

பாடல் கோபுரம் ஏந்தும் ஓவியம்
கைகளீல் தவழ்கிறது

மந்திரம் ஒன்றை
மன்னவன் சொன்னான்

மார்பினில் ஆடும்
மேனகை வந்தாள்

என் ஆசை நெஞ்சின் ராஜா
என் கண்ணில் ஆடும் ரோஜா

என் காதல் கோவில் ஜீவன்
கண்ணா வா ஹோய்..

ஓ மானே மானே மானே....


தேன் பூவே பூவே வா

படம் : அன்புள்ள ரஜினிகாந்த்
குரல் : எஸ்.பி.பாலா, ஜானகி
இசை : இளையராஜா


தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்

உனை நினைத்தேன் ....

பனி விழும் புல்வெளியில் தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்

உனை நினைத்தேன் ....

இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

உனை நினைத்தேன் ....

விழியிலே மனி விழியில்

படம் : நூறாவதுநாள்
குரல் : எஸ்.பி.பாலா, ஜானகி
இசை : இளையராஜா


விழியிலே மனி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்கலில் பொன்னும் மின்னும்
ஓஓஓ அர்த்த ஜாமங்கலில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கல் நீ ஓதலாம்

விழியிலே....

கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது ...
இவல் ரதியிலும் உடல் மலர்வனம்
இடழ் மரகதம் அதில் மதுரசம்
இவல் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

விழியிலே ....

காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி ...
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலையாகும் காவிரி மடியில் தூங்கும் காதலி
விடிய விடிய என் பேரை உச்சரி

விழியிலே ....

பூவாடை காற்று வந்து

படம் : கோபுரங்கள் சாய்வதில்லை
குரல் : ஜெயசந்தர், ஜானகி
இசை : இளையராஜா


பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூவெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆ.ஆ.ஆ
பூவாடை காற்று ல ல ல ல ல
வந்து ஆடை தீண்டுமே ல ல ல ல
முந்தானை இங்கே ல ல ல ல
குடையாக மாறுமே ல ல ல ல

பாதை தடுமாறும் இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்...
காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி
இது தானே மோகம் பபப்பா
ஒரு பூவின் தாகம் பபப்பா
குடையோடு நனையாதோ பூங்காவனம்

பூவாடை காற்று ...

ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை ...
அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு சூடு என்று
இரு கண்ணின் ஓரம் பபாப்பா
நிறம் மாறும் நேரம் பபாப்பா
மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்

பூவாடை காற்று ....

குயிலே குயிலே பூங்குயிலே

படம் : ஆண் பாவம்
குரல் : மலேசியா வாசுதேவன், சித்ரா,
இசை : இளையராஜா


குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே ...
ஒரு பூஞ்சோலையே ஒனக்காக தான்
பூத்தாடுதே வா வா

குயிலே குயிலே ....

தொட்டாலே நீ சினுங்கும் அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்குதடி
பட்டாலே பத்திக்கொள்ளும் காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு
சிட்டுகொரு பட்டுத் துணி கட்டித் தரவா
மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா
ஒட்டிகிற கட்டிகிற சிட்டுக் குருவி
கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்
நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒனையே நெனச்சி உயிர் வளர்த்தேன்
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை

குயிலே குயிலே....

ராசாதி ராசனத் தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசப் பட்டா
ராசாத்தி என்ன செய்வா அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா
அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான்
இன்னைக்கத அழிச்சா அவன் எழுதப்போறான்
பெண்ணே பழி அவன் மேல சொல்லாதேடி
ஆண்பாவம் பொல்லாதது கொல்லாதடி
தவறொ சரியோ விதி இது தான்
சரி தான் சரி தான் வழக்கெதுக்கு
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை

குயிலே குயிலே ....


Saturday, October 3, 2009

பாட்டு வரும் பாட்டு வரும்

படம் : நான் ஆனையிட்டால்


பாட்டு வரும் பாட்டு வரும்
உன்னை பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

பாட்டு வரும் பாட்டு வரும் ...

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்...
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும் -

பாட்டு வரும் பாட்டு வரும் ...

காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்...
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் காவியம் நானே...

பாட்டு வரும் பாட்டு வரும் ...

மனம் என்னும் ஓடையில் நீந்தி வந்தேன்
அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்....
ஏந்திய கையில் இருப்பவள் நானே
இறைவனை நேறில் வரவழைப்பேனே ...

பாட்டு வரும் பாட்டு வரும் ...

மதுரையில் பறந்த மீன் கொடியை

படம் : பூவா தலையா
வரிகள் : வாலி


மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே ...

தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
உன் பெண்மையில் கண்டேனே...
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும்
உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த...

காஞ்சித்தலைவன் கோவில் சிலைதான்
கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலைதான்
காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான்
சேயிழையே உன் செவ்விதழோ
தூத்துக்குடியின் முத்துக் குவியல்
திருமகளே உன் புன்னகையோ
திருமகளே உன் புன்னகையோ

மதுரையில் பறந்த...

பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ ...
புதுவை நகரில் புரட்சி கவியின்
குயிலோசை உன் வாய்மொழியோ
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ
குமரியில் காணும் கதிரவன் உதயம்
குலமகளே உன் வடிவழகோ
இவை யாவும் ஒன்றாய் தோன்றும்
உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த ....

நினைவாலே சிலை செய்து

படம் : அந்தமான் காதலி
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல் : கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்


நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா...ஆ...ஆ..ஆ
திருக்கோவிலே ஓடி வா


நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா...ஆ...ஆ..ஆ
திருக்கோவிலே ஓடி வா

நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
வேரின்றி மலரே ஏதம்மா
வேரின்றி மலரே ஏதம்மா

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

ஐயா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்
ஐயா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்
கன்னத்தில் கோலங்கள்

செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோவிலே ஓடிவா!

ஆ...ஆ..ஆ..திருக்கோவிலே ஓடிவா!
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
அதிகாலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்

என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
செவ்வானம் ஆனேன்
உன்னைத்தேடித் தேடி
திருக்கோவிலே ஓடிவா

ஆ...ஆ..ஆ..திருக்கோவிலே ஓடிவா!
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

ஆ...ஆ..ஆ..திருக்கோவிலே ஓடிவா!