Saturday, October 17, 2009

மெல்ல மெல்ல மெல்ல

மெல்ல.. மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல.. சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல

மெல்ல....

உச்சி முதற்கொண்டு பாதம் வரை - இங்கு
ஓடிடும் மின்னலை என்ன சொல்ல...
மிச்சம் இருப்பதை நாளை என்று
மிச்சம் இருப்பதை நாளை என்று - நெஞ்சில்
மின்னிடும் ஆசையை என்ன சொல்ல

மெல்ல ....

அத்திப் பழ்ததுக்கு மேலழகு - உந்தன்
ஆசை பழத்துக்கு உள்ளழகு ...
தத்தித் தவிக்கின்ற பொன்னழகு
தத்தித் தவிக்கின்ற பொன்னழகு - உன்னைத்
தழுவத் துடிக்கின்ற பெண்ணழகு

மெல்ல ....

தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள ...
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்..
ஆடுகின்றாய்.. ஆடுகின்றாய்..

மெல்ல ....

மேலைத் திசையினில் போய் உறங்கும் - கதிர்
மீண்டும் வரும் வரை நம் உலகம் ...
காலைப் பொழுதினில் சிந்தனைகள்
காலைப் பொழுதினில் சிந்தனைகள் - மறு
மாலை வரும் வரை கற்பனைகள்

மெல்ல ....

ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த
ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்...
ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை
ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை
நாம் ஒன்று இரண்டு என்பதுமில்லை

மெல்ல ....


No comments:

Post a Comment