Sunday, August 23, 2009

மாங்குயிலே பூங்குயிலே

படம் : கரகாட்டகாரன்
இசை : இளையராஜா


மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாளு
முது முது கன்னால
நான் சுத்தி வந்தேன் பின்னால

மாங்குயிலே...

தொட்டு தொட்டு விலக்கி வச்ச வெங்கலத்து செம்பு அத
தொட்டெடுத்து தலையில் வச்ச பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கிலருதடி என்ன படு ஜோரு
கன்னுக்கழகா பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனச தொட்டு பரிச்ச
தன்னந்தனிய என்னி ரசிச்ச
கன்னு வலை தான் விட்டு விரிச்ச
யேரெடுத்து பாத்து யெம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யெம்மா சேர்த்து என்னை சேர்த்து
முதையன் படிக்கும் முத்திரை கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லனும் மயிலு

மாங்குயிலே...

உன்ன மறந்திருக்க ஒரு போழுதும் அறியேன் யெம்ம
கன்னி இவ வெத்த விட்டு வேறெதையும் தெரிய
வங்கத்துல விளஞ்ச மஞ்சள் கிழங்கெடுத்து உரசி யெம்ம
இங்கும் அங்கும் பூசி வரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டு கிளியே
கொஞ்சி கிடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லிதான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்தில வாரேன் யெம்மா சாமத்தில தாறேன்
கோவப்பட்டு பாத்த யெம்ம வந்த வழி போறேன்
சந்தனம் கரச்சி பூசனும் என்னக்கு
முதையன் கணக்கு மோத்தமும் உனக்கு

மாங்குயிலே

கொடியிலே மல்லிகைப்பூ

படம் : கடலோரக் கவிதைகள்
குரல் : ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
இசை : இளையராஜா


கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால


பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு
அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே

கொடியிலே...


கண்ணுக்குள் நூறு நிலவா

படம் : வேதம் புதிது


கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா?
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா?

கண்ணுக்குள் நூறு நிலவா....


தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்ற்ம் சொல்லுமா
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது

கண்ணுக்குள் நூறு நிலவா....

ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்
உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்
என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது
ரெண்டா ஏது ஒன்று பட்ட போதும்

கண்ணுக்குள் நூறு நிலவா....

கண்ணுக்குள் ஏதோ

படம் : திருவிளையாடல் ஆரம்பம்
இசை : D.இமான்


கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர்வந்து எந்தன் உயிர்தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது
கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே....

காதல் வந்து கெடுத்தபின் கவிதைகள் படிக்கிறேன்
தோழிகளைத் தவிர்க்கிறேன் உன்னைத்தேடி வருகிறேன்
தாய் தந்தை இருந்துமேன் தனிமையில் தவிக்கிறேன்
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்
எந்தன் வீட்டை சொந்தமென்று நேற்றுவரை நினைத்தவள்
உன்வீட்டில் குடிவர நினைக்கிறேன்
உன்னைக் காதலித்த கணமே உனக்குள் வந்தேன்

கண்ணுக்குள் ஏதோ....

கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்
கனவுகள் இங்கு இல்லை கண்விழித்து நினைக்கிறேன்
பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட
அன்பே நானோ இறக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட
உண்மைக் காதல் சாவது இல்லையடி

கண்ணுக்குள் ஏதோ....

விழிகளில் விழிகளில்

படம் : திருவிளையாடல் ஆரம்பம்
குரல் : ஹரிஷ் ராகவேந்திரா
இசை : D.இமான்


விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்
யாரென்று நான் யாரென்று அடி மறந்தே போனதே
உன் பேரைக் கூடத் தெரியாமல் மனம் உன்னைச் சுற்றுதே
ஒருநாள் வரைதான் என நினைத்தேன்
பலநாள் தொடரும் வலிக் கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்


விழிகளில் விழிகளில்....

சாலையில் நீ போகையிலே மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்
காலையில் உனைப் பார்ப்பதற்கு சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி அதிருதே என் ஆறடி
ஒரு கார்பன் தாளென கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய்
அந்த காதலை நானும் வாசிக்குமுன்னே எங்கே ஓடுகிறாய்
போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்க்கமே
நீ போனாலே நீ போனாலே என் வாழ்நாள் சொற்பமே

விழிகளில் விழிகளில்...

பூவிலே செய்த சிலையல்லவா பூமியே உனக்கு விலையல்லவா
தேவதை உந்தன் அருகினிலே வாழ்வதே எனக்கு வரமல்லவா
மேகமாய் அங்கு நீயடி தாகமாய் இங்கு நானடி
உன் பார்வை தூறலில் விழுந்தேன் அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன் மரமாய் அசையுதடி
இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே
ஒரு பெண்கோழி நீ கூவித்தான் என் பொழுதும் விடிந்ததே

விழிகளில் விழிகளில்....

Saturday, August 22, 2009

உன்னைத்தானே தஞ்சம்

படம் : நல்லவனுக்கு நல்லவன்

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன் ...

உன்னைத்தானே...

மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா
கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தா
வெட்கம் என்ன சத்தம் போடுதா


என்னத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு

என்னத்தானே...

உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்தது

என்னத்தானே...

ரகசியமானது காதல்

படம் : கோடம்பாக்கம்
குரல் : ஹரீஷ் ராகவேந்திரா, ஹரிணி
இசை : சிற்பி


ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகமனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிகமிக
சுவாரசியமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது
சொல்லும் சொல்லைத் தேடித்தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிச்சததைப் போல
அது சுதந்திரமானதுமல்ல
ஈரத்தை இருட்டினைப் போல
அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல

ரகசியமானது காதல்....

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல
விரல் தொடுவதில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல
அதை உயிரினில் உணரணும் மெல்ல

ரகசியமானது காதல்...

பெண்ணே நீயும் பெண்ணா

படம் : பிரியமான தோழி

பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம் .....
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பனிப் பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் பொது தான் மொழிகள் இனிக்கிறது
பெண்ணே நீயும் ...

புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை
உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா
சீன சுவரை போலே எந்தன் காதல் கூட
இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியுமா
பூங்கா என்ன வாசம் இன்று உந்தன் மீதுதெரியும்
தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும்
காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்
கம்பன் செல்லியும் சேர்ந்து தான் கவிதை எழுதியது
எந்தன் முன்பு வந்து தான் பெண்ணை நிற்கிறது

பெண்ணே நீயும் ...

மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும்
உன்னை பார்த்த பின்னால் மழை தோன்றதே
பூக்கள் தேடி தானே பட்டாம் பூச்சி பறக்கும்
உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே
மின்னும் வெண்மை என்ன என்று மின்னல் உன்னை கேட்க்கும்
எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும்
உன்னை பார்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும்
நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய்
நீ தான் காதல் பூ மழை நனைந்தேன் பத்திரமாய்

ஆப்பிள் பெண்ணே

படம் : ரோஜா கூட்டம்
குரல் : ஸ்ரீநிவாஸ்
இசை : பரத்வாஜ்


ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ...
பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ
என்ன நீ பார்க்கவில்லை
என் உயிர் நொந்ததடி
பென்ணே நீ போன வழியில்
என் உயிர் போனதடி
எங்கோ ஓர் சாலை வளைவில்
உன் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என் உயிர் தேம்புதடி

மின்னல் கண்டு கண்களை மூடி
கண்களை திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியை கையில் கொள்ள
ஐயோ ஐயோ வசதியில்லை
என்னை நோக்கி சிந்திய மழைத்துளி
எங்கே விழுந்தது தெரியவில்லை
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ
இதுவரை ஏதும் தகவலில்லை
அழகே உன்னை காணாமல்
அன்னம் தண்ணீர் தொடமாட்டேன்
ஆகாயத்தில் மறுபக்கம் சென்றால் கூட
விடமாட்டேன்
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்
கடவுளை தொழ மாட்டேன்

எங்கோ..

பெண்ணே உன்னை மறூமுறை பார்த்தால்
லவ் யூ லவ் யூ சொல்வாயா
பாவம் ஐயோ பைத்தியம் என்று
பார்வையாலே கொல்வாயா
உலகின் விளிம்பில் நீ இருந்தாலும்
அங்கும் வருவேன் அறிவாயா
உயிரை திருகி கையில் தந்தால்
ஓகே என்று சொல்வாயா
ஆமாம் என்று சொல்லிவிட்டால்
ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்
இல்லை என்று சொல்லிவிட்டால்
சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும்
மீண்டும் காதலிப்பேன்..

எங்கோ..

வசீகரா என் நெஞ்சினிக்க

படம் : மின்னலே
குரல்: பம்பாய் ஜெயஸ்ரீ


வசீகரா என் நெஞ்சினிக்க உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் ...
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சில நேரம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல்
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள் நான் வேண்டும்

வசீகரா...

தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ
அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால்
அதை சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே

Friday, August 21, 2009

விழியில் உன் விழியில்

படம் : கிரீடம்

விழியில் உன் விழியில் வந்துவிழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என் வழிதுணை
நீ தான் என்று நிழல் சொன்னதே...

உன்னேடு வாழ்திடதானே நான் வாழ்கிறேன்..
உன் கையில் என்னை தந்து தோள்சாய்கிரேன்
ஓ தோள்சாய்கிரேன் ..

இதுவரை என் இருதயம்
இந்த உணர்வினில் தடுமாரவில்லை
முதல்முரை இந்த இளமையின்
சுகம் உனக்கினி நான் துங்கவில்லை
குடையோடு நான் போனேன்
மழையினில் ஏனோ நனைகின்றேன்..
கடிகாரம் இருந்தாலும்
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்..
என் தனிமைக்கு தனிமை நீ வந்து கொடுத்தாய்..

விழியில் உன்..

சிரிப்பிலெ உன் சிரிப்பிலெ
சிறையடைக்கிராய் நான் மீழவில்லை..........
உறவுகள் ஒன்று சேர்கையில்
என்ன ஆகின்றேன் என தெரியவில்லை..
உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே....
உரையாடல் தொடர்தாலும்
காலங்கள் கூட பிடிக்கிறதே..
என் கனவுக்கு கனவு நீவந்து கொடுத்தாய்..........

விழியில் உன்..

உனக்குள் நானே உருகும்

படம் : பச்சைக்கிளி முத்துச்சரம்

மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா...உன் வானவில்லா...
பொன் மான் இவளா...உன் வானவில்லா..

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னைவாட்டும்
ரணமும் தேனல்லவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தைதான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்
மனதில் கனத்தைத் தந்தாய்
ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா
(உனக்குள் நானே)

ஓஓஓஓ...தீப்போல் தேன்போல் சலனமேதான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச்சென்றாயே
நினைவை வெட்டிச்சென்றாயே
இனி ஒரு பிறவி
உன்னோடு
வாழ்ந்திடவா
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா
(உனக்குள் நானே)(சிறுகச் சிறுக)

வேறென்ன வேறெரன்ன வேண்டும்

படம் : மின்னலே
குரல் : உன்னிகிருஷ்ணன், ஹரிணி


வேறென்ன வேறெரன்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய்
வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம்
கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும்
நான் தருவேனே

ஓ மௌளனம் மௌளனம் மௌளனம்
மௌளனமேன் மௌளனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும்
செய்கிறேன் செய்கிறேன்

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கல்லையா
யாரிடம் கேட்டு சொல்வேன்

(இவன் யாரோ)

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள
பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால்
அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே
நெஞ்சே நெஞ்சே உன்னை
உள்ளே வைத்தது யாரு
நீ வரும் பாதை எங்கும்
என்னிரு உள்ளங்கை தாங்கும்

(இவன் யாரோ)

கால்களின் கொலுசே கால்களின்
கொலுசே கோபம் வருகிறதே
உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன்
நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே
ஏனோ ஏனோ என்னை
பார்க்கச் செய்தாய் உன்னை
நான் உன்னைக் காணத்தானா
யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா

இவன் யாரோ....

நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா
ஒரு முறை சொல்லி விடு
முறை ஒரு முறை சொல்லி விடு...
ஒரு முறை சொல்லி விடு...
ஒரு முறை சொல்லி விடு...சொல்லி விடு...
சொல்லி விடு...சொல்லி விடு...

Saturday, August 15, 2009

புது வெள்ளை மழை

படம் : ரோஜா
குரல் : உன்னிமேனன், சுஜாதா
இசை : ஏ.ஆர்.ரகுமான்



புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது....

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது

புது வெள்ளை மழை...

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

புது வெள்ளை மழை...

பனி விழும் மலர் வனம்

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
பனி விழும்...

சேலை மூடும் இளஞ்சோலை,
மாலை சூடும் மலர்மாலை....
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும்
கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்

பனி விழும்......

காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்....
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..

பனி விழும்.......

ஒரு ஜீவந்தான் உன் பாடல்தான்

படம் : நான் அடிமை இல்லை
இசை : விஜயானந்


ஒரு ஜீவந்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவந்தான்....

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

ஒரு ஜீவந்தான்....

காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையா
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நாந்தானைய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி
சுருதியும் லயமும் சுகமாய் இனையும் தருணம்

ஒரு ஜீவந்தான்....

செந்தாழம் பூவில்

படம் : முள்ளும் மலரும்
இசை : இளையராஜா


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழ்ம்பூவில்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்


இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம்பூவில்


இரு விழியின் வழியே நீயா

படம் : சிவா
இசை : இளையராஜா



இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது

விழியின்....

தொட்டில் இடும் இரு தேம்மாங்கனி
என் தோளில் ஆட வேண்டுமே
கட்டில் இசும் உன் காமன் கனி
மலர் மாலை சூட வேண்டுமே
கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
தேதி ஒன்று பார்க்கின்றேன்
கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
தேதி சொல்ல போகிறேன்
கார் கால மேகம் வரும்
கல்யாண ராகம் வரும்
பாடட்டும் நாதஸ்வரம்
பார்க்கட்டும் நாளும் சுகம்
விடிகாலையும் இளமாலையும்
இடை வேளையின்றி இன்ப தரிசனம்

விழியின்...

உன் மேனியும் நிலக்கண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்
ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்
எங்கே எங்கே ஒரே தரம்
என்னை உன்னில் பார்க்கிறேன்
இதோ இதோ ஒரே சுகம்
நானும் இன்று பார்க்கிறேன்
தென்பாண்டி முத்துக்களா
நீ சிந்தும் முத்தங்களா
நோகாமல் கொஞ்சம் கொடு
உன் மார்பில் மஞ்சம் இடு
இரு தோள்களில் ஒரு வானவில்
அது பூமி தேடி வந்த அதிசயம்

விழியின்...

அடி வான்மதி என் பார்வதி

படம் : சிவா
குரல் : எஸ்.பி.பாலா, ஜானகி
இசை : இளையராஜா


அடி வான்மதி...என் பார்வதி...
காதலி...கண் பாரடி...

அடி வான்மதி...என் பார்வதி...
காதலி...கண் பாரடி...
தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
அடி பார்வதி...என் பார்வதி...
பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா
பாடும் பாடல் அங்கே கேட்காதா

அடி வான்மதி...என் பார்வதி...

சின்ன ரோஜா இதழ்...
அது கன்னம் நான் என்றது...
பாடும் புல்லாங்குழல்...
உன் பாஷை நான் என்று கூறும்...
கூந்தல் அல்ல...தொங்கும் தோட்டம்...
தாளில் சாய்ந்தால்...ஊஞ்சல் ஆட்டும்
தேன் தர மீண்டும்...நீவர வேண்டும்..
கண்வாசல் சார்த்தாது வா...ஆஆஆ...

ஒரு வான்மதி...உன் பார்வதி...
காதலி...நீ காதலி... தேவன் எந்தன் தேவதாசை
காண ஏங்கினேன் ,என் தேவதாஸ்...என் தேவதாஸ்..
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே...
பாரு நானும் உன்னை பார்த்தேனே...

ஒரு வான்மதி...உன் பார்வதி...

கோடை காலங்களில்... குளிர் காற்று நீயாகிறாய்...
வாடை நேரங்களில்... ஒரு போர்வை நீயாக வந்தாய்...
கண்கள் நாலும்...பேசும் நேரம்...
நானும் நீயும் ஊமை ஆனோம்
மைவிழி ஆசை...கைவளையோசை...
என்னென்று நான் சொல்லவா...ஆஆஆ...

அடி வான்மதி...என் பார்வதி...
காதலி...கண் பாரடி...தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
என் தேவதாஸ்...என் தேவதாஸ்..
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே...
ஹஹ்ஹ.. ஹா..பாரு நானும் உன்னை பார்த்தேனே...

அடி வான்மதி...என் பார்வதி...
தேவதாஸ்...என் தேவதாஸ்..