Saturday, April 25, 2009

அந்திமழை பொழிகிறது

பாடல்: அந்திமழை
படம்:ராஜபார்வை
பாடியவர்கள்:S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமயிலே எத்தனை நாளடி இளமயிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளில் சுமையடி இளமயிலே

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சுகொடு கொஞ்சமிரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்
சிப்பியில் தப்பிய நித்திலமே, ரகசிய ராத்திரி புத்தகமே

வாடிக்கை மறந்ததும் ஏனோ

வாடிக்கை மறந்ததும் ஏனோ? - என்னை
வாட்டிட ஆசை தானோ - பல
கோடி மலரழகை மூடி வைத்து மனதை
கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை)

வாடிக்கை மறந்திடுவேனோ? - என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ? - புது
மங்கை எந்தன் மனதில்,பொங்கிவரும் நினைவில்
மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை)

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது? - பல
உயிர்கள் மகிழ்வதும் ஏது? - நெஞ்சில்
இனித்திடும் உறவை இன்பமெனும் உணவைத்
தனித்துப் பெறமுடியாது

அந்தி நேரம் போனதால்
ஆசை மறந்தே போகுமா?
அன்புக் கரங்கள் சேரும்போது
வம்பு வார்த்தைகள் ஏனோ?
இன்ப வேகம் தானோ..? (வாடிக்கை)

காந்தமோ இது கண்ணொளிதானோ?
காதல் நதியில் நீந்திடும் மீனோ?
கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ..?

பொறுமை இழந்திடலாமோ? - பெரும்
புரட்சியில் இறங்கிடலாமோ? - நான்
கருங்கல்லுச் சிலையோ காதலெனக் கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ..?

சைக்கிளும் ஓட மண் மேலே - இரு
சக்கரம் சுழல்வது போலே - அணை
தாண்டிவரும் சுகமும்,தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே...


நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

படம் : பாலும் பழமும்

நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும்
உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப்
பசியாற வேண்டும்
பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும்
தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும்
சேயாக வேண்டும் நீயாக வேண்டும்

நான் பேச ....

சொல்லென்றும் மொழியென்றும்
பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு
விலையேதும் இல்லை
விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக
உயிர் சேர்ந்த பின்னே
உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி
வேறேதும் இல்லை
வேறேதும் இல்லை

நான் பேச ...


காதல் சிறகை காற்றினில் விரித்து

படம் : பாலும் பழமும்
குரல் :P.சுசிலா
வரிகள் : கண்ணதாசன்.
இசை : விஸ்வனாதன் ராமமூர்த்தி



காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..


எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா...
இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி,
இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி
இரு கரம் கொண்டு வணங்கவா.. ,
இரு கரம் கொண்டு வணங்கவா..


முதல் நாள் காணும் புதமணபெண்போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா,
பரம்பரை நாணம் தோன்றுமா


பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் இருந்தால்....
பேசமறந்து சிலையாய் இருந்தால்...
அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....
அதுதான் காதலின் சந்நிதி

(காதல் சிறகை)

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல (2)

(உன்னைக்)

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

ஆடாத மனமும் ஆடுதே

ஆ..ஆ..ஆடாத மனமும் ஆடுதே
ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே
ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே
ஆ..ஆ.ஆ.ஆ.ஆ….

கோவை கனிபோலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் வானழகே
கோவை கனிபோலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் வானழகே
இனி வானோரும் காணாத ஆனந்தமே(2)

ஆடாத மனமும் ஆடுதே
ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே

ரோஜா … ( ஆ.. ) புது ரோஜா ( ம்ம்.. )
அழகு ரோஜா மலர் தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
ரோஜா மலர் தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே (2)

ஆடாத மனமும் ஆடுதே
ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே

Friday, April 24, 2009

மாலை சூடும் வேளை

படம் : நான் மகான் அல்ல.
இசை : இளையராஜா.
குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.


மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு

(மாலை சூடும் வேளை...)

காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்

கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே

நீ கொஞ்ச நான் கெஞ்ச
வேதங்கள் இன்பம்
நீண்ட நேரம் தோன்றுமோ

(மாலை சூடும் வேளை...)

சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை
சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை

மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்
ஆடை கொண்டு மூடுமோ

(மாலை சூடும் வேளை...)

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
தேனே.. ஆடி வரும் தேனே...
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

உச்சிதனை முகர்ந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி..
மேனி சிலிர்க்குதடி..

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி..
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி.
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி (உன்னைத் )

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

சாமிகிட்டச் சொல்லி வச்சி

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

முத்துமணியே பட்டுத் துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே
வந்த துணையே வந்து அணையேன்
அந்தமுள்ள சந்திரனைச் சொந்தம் கொண்ட சுந்தரியே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

முத்துமணியே பட்டுத் துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும் விதி மாறாத இறை வேதம்
பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்
வாழ்நாளில் சுகம்தானிது போலே வாழும் வழி கேட்டேன்
வண்ணக் கனவே வட்ட நிலவே
எண்ண எண்ண இன்பம் தரும் வண்ணம் வரும் கற்பனையே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

முத்துமணியே பட்டுத் துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

Saturday, April 18, 2009

என்ன பார்வை உந்தன் பார்வை

படம் : காதலிக்க நேரமில்லை
குரல் : ஜேசுதாஸ், சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : வி.ரா
நடிகர்கள் : முத்துராமன், காஞ்சனா


என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா....ஆ..

என்ன பார்வை உந்தன் பார்வை
எனை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ணச் சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா....ஆ...

தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா
சின்னச் சின்ன நெஞ்சில் உன்னை
எண்ண எண்ண அம்மம்மா... ஹோய்..

கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ
சொல்லச் சொல்ல உள்ளம் துள்ளும்
இன்பம் என்ன சொல்லம்மா... ஹோய்

( என்ன )

மை கொண்ட கண்கள் மெல்ல மூடும்
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ
பிஞ்சுத் தென்றல் நெஞ்சைத் தொட்டுக்
கொஞ்சக் கொஞ்ச அம்மம்மா...ஹோ

ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்
ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா
அக்கம்பக்கம் யாரும் இல்லை
வெட்கம் என்ன சொல்லம்மா.. ஹோ..

( என்ன )


காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு..
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு..
தன்னன்னானன...தன்னன்னானன..தன்னன்னானன...தன்னன்னானன..
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..ஆ..ஆ..ஆ....

தூங்காத காற்றே துணை தேடி ஓடி
என்சார்பில் எந்தன் காதல் சொல்வாயா
நில்லாத காற்று சொல்லாது தோழி
நீயாக உந்தன் காதல் சொல்வாயா
உள்ளே எண்ணம் அரும்பானதா
உன்னால் இன்று ருதுவானவ
நானதை சோதிக்கும் நாள் வந்தது..
தன்னன்னானன...தன்னன்னானன..தன்னன்னானன...தன்னன்னானன..

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்
உன் ஸ்வாச வாசம் வீசும் பூவெல்லாம்
நீ வந்து போனால் என் வீடு எங்கும்
உன் கொலுசின் ஓசை கேட்ட்கும் நாளெல்லாம்
கனா வந்தால் மெய் சொல்கிறாய்
கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்
போவென்னும் வார்த்தையால் வா எங்கிறாய்
தன்னன்னானன...தன்னன்னானன..தன்னன்னானன...தன்னன்னானன..


இளமை என்னும் பூங்காற்று

இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்

தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா?

(இளமை)

அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ

(இளமை)

மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சிச் சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ

(இளமை)

அழகே அழகு.. தேவதை...

படம்: ராஜ பார்வை
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ்



அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்


கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்


(அழகே அழகு.. தேவதை...)


சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது


(அழகே அழகு.. தேவதை...)


பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே


(அழகே அழகு.. தேவதை...)

நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை

நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

(நினைவோ ஒரு பறவை...)

ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன் அதி இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
தந்தேன் தரவந்தேன்

(நினைவோ ஒரு பறவை...)

பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்

(நினைவோ ஒரு பறவை...)


காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்

காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஜயோ நான் தொலைந்தேன்
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஜயோ நான் தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை...
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்த்த மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிறக்கத்தில் தான்

காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஜயோ நான் தொலைந்தேன்

உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழருதடீ
உன்னிடத்தில் நான் போசியது எல்லாம்
உயிருக்குள் ஒழிக்குதடீ
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஜயோ நான் தொலைந்தேன்

அமுதை பொழியும் நிலவே

படம் : தங்கமலை ரகசியம்
குரல் : பி சுசீலா


அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
ஆஆ.....
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்

புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
ஆஆ.......
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?

இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?


Get Your Own Hindi Songs Player at Music Plugin

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்

படம் : நெஞ்சிருக்கும் வரை
குரல் : டி. எம். சௌந்தர ராஜன் - பீ. சுசீலா


முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேலையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன

(முத்துக்களோ)

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென்ன
வாழைத் தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன

(முத்துக்களே)

அத்திக்காய் காய் காய்

படம் : பலே பாண்டியா
குரல் : ரி.எம்.சௌந்தரராஜன் P.B.சிறீநீவாஸ் பி.சுசீலா ஜமுனா ராணி
வரிகள் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஷ்வநாதன் ரி.ஆர்.ராமமூர்த்தி


அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ!
என்னுயிரும் நீயல்லவோ..!

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக் காய்

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ..

உள்ளமெலாமிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையென்னை காயாதே
கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையில் ஏங்காய் வெண்ணிலா


நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

படம் : வாழ்க்கைப்படகு
இசை : எம். எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல் : PB ஸ்ரீனிவாஸ்



நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

(நேற்று வரை)

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன
பூமுகம் சிவந்தா போகும்

(நேற்று வரை)

பாவை உன் முகத்தைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே கனவோ என்று
வாடினேன் தனியே நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு

(நேற்று வரை)

காற்று வந்தால் தலை சாயும்

குரல் :பீ.பீ.ஸ்ரீனிவாஸ் - பீ.சுசீலா
இசை: எம்.எஸ்.வீ -டி.கே.ஆர்


காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்
ஆற்றினிலே கரை புரளும்
வெள்ளம்
ஆசையிலே கரை புரளும்
உள்ளம்

ஆடை தொட்டு விளையாடும்
தென்றல்
ஆசை தொட்டு விளையாடும்
கண்கள்

ஒருவர் மட்டும் படிப்பது தான்
வேதம்
இருவராக படிக்க சொல்லும்
காதல்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்

மழை வரும் முன் வானை மூடும்
மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்
மோகம்
ஓடி வரும் நாடி வரும்
உறவு கண்டு தேடி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும்
மானும்

பாடி வரும் பருவ முகம்
பக்கம் வந்து நின்றவுடன்
பாசத்தோடு சேர்ந்து கொள்வேன்
நானும்
நானும்
நானும்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்

அஞ்சி அஞ்சி நடந்து வரும்
அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும்
கன்னம்
கொஞ்சி வரும் வஞ்சி முகம்
கோபுரத்து கலசம் என
அந்தி வெய்யில் நேரத்திலே
மின்னும்

மின்னி வரும் நேரத்திலே
மேனி கொண்ட பருவத்திலே
முன் இருந்தால் தோற்று விடும்
பொன்னும்

உள்ளம்
துள்ளும்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
ஆஹா.. தாழை மடல் சுற்றும் காற்றைக் கண்டேன்
ஓஹோ..தள்ளாடி உள்ளத்தைத் தழுவக் கண்டேன்
எந்தன் வாழை உடல் சற்று வாடக் கண்டேன்
வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன்
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஆஹா .. வஞ்சி நடை சற்று அஞ்சக் கண்டேன்
ஓஹோ..வண்ணக் கனி இதழ் கொஞ்சக் கண்டேன்
ஆஹா ... பிஞ்சு கொடியிடை கெஞ்சக் கண்டேன்
பெண்ணுக்குள் மண்ணோடு விண்ணைக் கண்டேன்
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
ஆஹஹா ஹாஹா...ஆஆஆஆஆஆஆ
ஆஹா மாலைக்கு மாலை மாயம் கண்டோம்
ஓஹோ..வயதுக்கும் மனதுக்கும் நியாயம் கண்டோம்
ஓஹோ..சோலைக் கிளி என்று மாறுகின்றோம்
சொல்லுக்கு சொல் இன்று சேருகின்றோம்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
ஆஹஹாஹா ஆஹாஹாஹா
ஓஹோ ஓஹோ ஒஹோஹோ ஹோஹோ

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே..

காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருவதினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன
பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து தனியிடம் பார்த்து
தருகின்ற மனதல்லவோ.. தருகின்ற மனதல்லவோ

காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

கைவிரலாலே தொடுவதிலே இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தால் இந்த வையகம் இருண்டதென்ன
செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து மயக்கத்தை கொடுப்பதென்ன
… மயக்கத்தை கொடுப்பதென்ன

காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
லா.. ல..லால்லா..லால்லல்லா……..

மலரே மௌனமா மௌனமே வேதமா

மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா

(மலரே)

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே

(மலரே)


Tuesday, April 14, 2009

பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

படம் : தூறல் நின்னு போச்சு
குரல் : கே.ஜே.யேசுதாஸ் உமா ரமணன்
வரிகள் : முத்துலிங்கம்
இசை : இளையராஜா


பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது நனநனநனந‌ன‌னா

பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

பூவை எந்தன் தேவை உந்தன் சேவை அல்லவா
பூவை எந்தன் தேவை உந்தன் சேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்கத்தில் சுகம் நனநனநனந‌ன‌னா

பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹரிஸ் ஜெயராஜ்


ஏஹே ஆஹா…
லாலா… லாலா….

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே…. உன் மேல் பிழை…
நில்லாம் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை…
பொன்வண்ணம் சூடிய காரிகை….
பெண்ணே நீ காஞ்சனை….

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி…..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே…. உன் மேல் பிழை…

ஆஹா…..ஓஹோ..ஹோ…
ஆஹா ஹ ஹா ஹா
ஆஹா ஹ ஹா ஹா
ஆஹா ஹ ஹா ஹா
ஆஹா ஹ ஹா ஹா
ச ச ச ச ச ச….

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ… கோபம் இல்லா
நீ நின்ற இடமெல்லாம்
விலையேறிப் போகாதோ
நீ சிந்தும் வழியெல்லாம்
பனிக்கட்டியாகாதோ
என்னோடு வா
வீடுவரைக்கும்
என் வீட்டைப்பார்
என்னைப் பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சு போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சு போகாதே
போகாதே தே…தே… தே…

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே…. உன் மேல் பிழை…
ஓஹோ….ஹோ
நில்லாம் வீசிடும் பேரலை…
ஹோ… ஹோ….
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை…
பொன்வண்ணம் சூடிய காரிகை….
பெண்ணே நீ காஞ்சனை….

ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஊ ஊ ஊஹூ
ஊ ஊ ஊஹூ
ஆஹா…..

துக்கங்களை தூக்கிச் சென்றாய்
தூக்கிச் சென்றாய்…
ஏக்கங்களைத் தூவிச் சென்றாய்
உன்னைத்தாண்டி போகும் போது
போகும் போது…..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று என் காலும்
என் காலும் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே
காதல் என்னைக்கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத்தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே…. உன் மேல் பிழை…
நில்லாம் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை…
பொன்வண்ணம் சூடிய காரிகை….
பெண்ணே நீ காஞ்சனை….

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
ஓஹோ ஹோ…
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி…..
அந்தாதி…

ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா

Sunday, April 5, 2009

எங்கெங்கு நீ சென்ற போதும்....

படம் : நினைக்க தெரிந்த மனமே
இசை : இளையராஜா
குரல் : கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா



எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்

கண்களின் பார்வை அம்புகள் போலே
நெஞ்சினிலே பாய்வதும் ஏன்?
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது
காயங்களும் ஆறியதேன்?
ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்
பிரிந்தது ஏனோ உன் உறவு
நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும்
மயங்குவதேனோ என் மனது
இரு நெஞ்சின் துன்பம் இது காதல் தான்
அதுபோல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

(எங்கெங்கு நீ சென்ற போதும்...)

மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்
மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்
கண்மணியே கண்மணியே
சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்
சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்
கடலினில் கூட அலை நிற்கட்டும்
உன்னோடு சேரும் ஒரு நேரமே
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

(எங்கெங்கு நீ சென்ற போதும்...)

Friday, April 3, 2009

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா ..

படம்: உன்னை நினைத்து
இசை: சிற்பி
பாடியவர்: சுஜாதா / உன்னி மேனன்


என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா? இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா?
உன்னை நான் என்பதா?
(என்னை தாலாட்டும்..)

நதியாகா நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகினேன்
இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்
முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்க்கையிலே வானமாய் மாறிவிட்டாய்
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்
(என்னை தாலாட்டும்..)

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே
ஆகாயம் ஓர் நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் ககியில் விளக்காகுமே
அன்பே நான் இருந்தேன் வெள்ளை காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால் அதில் நானே திரி ஆகிறேன்
தினம் தீயாகிறேன்
(என்னை தாலாட்டும்..)

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ..

படம்: பார்த்தேன் ரசித்தேன்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், ரேஷ்மி
வரிகள்: வைரமுத்து



பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
(பார்த்தேன்..)
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உறைக்க
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன்..)

கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓட வில்லை

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

தேவதையும் பேருந்தில் வருமா
கனவா நனவா தோன்றவும் இல்லை
நல்ல வேளை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை
நெற்றி என்ற மேடையிலே
ஒற்றை முடியை ஆட வைத்தாய்
ஒற்றை முடியில் என்னை கட்டி
உச்சி வெயிலில் தூக்கிலிட்டாய்

மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன்..)

வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலை கொடு
வந்த என்னை வேண்டாம் என்றால்
என்னை அணைத்தே அணைத்தே கொன்று விடு

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

உலர்ந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓர பார்வையில் உருக விடு
என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்களாகி போனால் கூட
உன்னை தவிர இன்னொரு பெண்ணை
உச்சி மூர்ந்து பார்ப்பதும் இல்லை

மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன்..)


தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன்!

படம்: குருவி
பாடல் : தேன் தேன் தேன்
இசை: வித்யாசாகர்
இயக்குநர் : தரணி



தேன் தேன் தேன்
உன்னை தேடி அலைந்தேன்!
உயிர் தீயாய் அலைந்தேன்!
சிவந்தேன்!


தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்!
உன்னை காண தயந்தேன்!
கரைந்தேன்!


என்னவோ சொல்ல துடித்தேன்!
இனிதே செய்ய துடித்தேன்!
உன்னோட சேரத் தான் நானும் அலைந்தேன்!

தேன் தேன் தேன்
உன்னை தேடி அலைந்தேன்!
உயிர் தீயாய் அலைந்தேன்!
சிவந்தேன்!


வாழவரும் கையை ரசித்தேன்!
அழவரும் கண்ணை ரசித்தேன்!
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்!
குத்தவரும் பொய்யை ரசித்தேன்!
முட்டவரும் மெய்யை ரசித்தேன்!
உறங்காமல் இன்னும் உந்தன் உள்ளம் ரசித்தேன்!


நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்!
ஏதும் சொல்லும் அதையும் ரசித்தேன்!
நீ செய்யும் யாவும் ரசித்தேன்!
இன்னும் செய்யாததையும் ரசித்தேன்!
உன்னால் தானே நானும் என்னை ரசித்தேன்!

தேன் தேன் தேன்
உன்னை தேடி அலைந்தேன்!
உயிர் தீயாய் அலைந்தேன்!
சிவந்தேன்!

ஆ அ அ அ ஹ ஹ ஹா


சேலையில் நிலவை அறிந்தேன்!
காலில் சிறகை அறிந்தேன்!
கனவிலே காதல் என்று மிரள அறிந்தேன்!
திருடனாய் உன்னை அறிந்தேன்!
திருடினாய் என்னை அறிந்தேன்!
என் உயிர் திருடத் தானே ஆசை அறிந்தேன்!


என் பக்கம் உன்னில் அறிந்தேன்!
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்!
உன் தென்றல் உன்னால் அறிந்தேன்!
அதில் தோன்றும் பிம்பமாய் அறிந்தேன்!
நீ நடமாடும் திராட்சை தோட்டம் என்றில் அறிந்தேன்!


தேன் தேன் தேன்
உன்னை தேடி அலைந்தேன்!
உயிர் தீயாய் அலைந்தேன்!
சிவந்தேன்!


ஏய்! தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்!
உன்னை காண தயந்தேன்!
கரைந்தேன்!

கிழக்கே பார்த்தேன் விடியலாய்...

படம் : ஆட்டோகிராஃப்

கிழக்கே பார்த்தேன் விடியலாய்
இருந்தாய் அன்புத்தோழி..
என் ஜன்னலின் ஒரம் தென்றலாய்
வந்தாய் அன்புத்தோழி..
தனிமையில் இருந்தால் நினைவாய்
இருப்பாய் அன்புத்தோழி..
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய்
ஆனேன் உன்னால் தோழி..

தோழி உந்தன் வருகையால்
நெஞ்சம் தூய்மையானதடி..
நல்ல தோழி நல்ல நூலகம்
உன்னால் புரிந்ததடி..

தாகம் என்று சொல்கிறேன்..
மரக்கன்று ஒன்றைத் தருகிறாய்..
பசிக்குது என்று சொல்கிறேன்..
நெல்மணி ஒன்றைத் தருகிறாய்..

உந்தன் கைவிரல் பிடிக்கையில்
புதிதாய் நம்பிக்கை பிறக்குது..
உந்தன் கூட நடக்கையில்
ஒன்பதாம் திசையும் திறக்குது..

என் பயணத்தில் எல்லாம்
நீ கைக்காட்டி மரமாய் முளைத்தாய்..
என் மனதை உழுது நீ
நல்ல விதைகளை விதைத்தாய்..

என்னை நானே செதுக்க நீ
உன்னையே உளியாய் தந்தாய்..
என் பலம் என்னவென்று எனக்கு நீ
இன்றுதான் உணர வைத்தாய்..

மழையோ உந்தன் புன்னகை??
மனசெல்லாம் மெல்ல நனையுதே..
பனியோ உந்தன் பார்வைகள்??
என் கண்ணிமை மயிர்களில் தூங்குதே..

வேருக்குள் விழுந்த நீர்த்துளி
பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே..
உனக்குள் ஏற்படும் உற்சாகம்
என்னையும் குதூகலப் படுத்துதே..

தோழி ஒருத்தி கிடைத்தால்
இங்கு இன்னொரு பிறவி கிடைகும்..
இதுவரை இந்த உண்மை
ஏன் தெரியவில்லை எவர்க்கும்??

மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை..
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி..
படைத்தவன் கேட்டால் கூட
உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி.

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே.

படம்: ஜெயம் கொண்டான்
பாடல்: நான் வரைந்து வைத்த சூரியன்
பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ
இசை: வித்யாசாகர்


நான் வரைந்து வைத்த சூரியன்
ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி
மலர்கின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள்
மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைத்துளி
அமுதம் ஆனதே
நான் இழுத்துவிட்ட மூச்சிலே
இசை கசிந்ததே

நான் வரைந்து வைத்த சூரியன்
ஒளிருகின்றதே
ஒளிருகின்றதே……..
நான் நடந்து சென்ற மணல் வெளி
மலர்கின்றதே
மலர்கின்றதே………..

ஜன்னல் கம்பி
உந்தன் கைகள் பட்டுபட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சட்டை
உந்தன் கண்கள் தொட்டுதொட்டு
தங்கச் சிற்பம் என்று மாறியதே

ஜன்னல் கம்பி
உந்தன் கைகள் பட்டுபட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே………

கம்பன் சட்டை
உந்தன் கண்கள் தொட்டுதொட்டு
தங்கச் சிற்பம் என்று மாறியதே…..

தூக்கும் புன்னகையாலே
என் தோள்கள் இறக்கைகள் ஆக…

நாக்கு உன் பெயர் கூற
என் நாள்கள் சர்க்கரை ஆக…

தலைகீழ் தடுமாற்றம்
தந்தாயே என் நீயே
என் கால்களில்……

நான் வரைந்து வைத்த சூரியன்
ஒளிருகின்றதே

நான் நடந்து சென்ற மணல் வெளி
மலர்கின்றதே

ஹா…ஹா…. அஹா….ஹா….அ….அ….அ….
ஹா…ஹா…. அஹா….ஹா….அ….அ….அ….

பள்ளி செல்லவில்லை
பாடம் கேட்கவில்லை
அள்ளிக்கொள்ள மட்டும் நான் படிப்பேன்

நல்ல முல்லை இல்லை
நாணல் கயிறு இல்லை
உன்னை மட்டும் நான் தொடுப்பேன்

பள்ளி செல்லவில்லை
பாடம் கேட்கவில்லை
அள்ளிக்கொள்ள மட்டும் நான் படிப்பேன்….

நல்ல முல்லை இல்லை
நாணல் கயிறு இல்லை
உன்னை மட்டும் நான் தொடுப்பேன்….

ஊஞ்சல் கயிறு இல்லாமல்
என் ஊமை மனது ஆடும்

தூங்க இடம் இல்லாமல்
என் காதல் கனவை நாடும்

நொடியும் விளகாமல்
கொஞ்சம் கொஞ்சம் தங்கும் நெஞ்சில்

நான் வரைந்து வைத்த சூரியன்
ஒளிருகின்றதே

நான் நடந்து சென்ற மணல் வெளி
மலர்கின்றதே

நான் துரத்தி நின்ற காக்கைகள்
மயில்கள் ஆனதே

என் தலை நனைத்த மழைத்துளி
அமுதம் ஆனதே

நான் இழுத்துவிட்ட மூச்சிலே
இசை கசிந்ததே

நான் வரைந்து வைத்த சூரியன்
ஒளிருகின்றதே

நான் நடந்து சென்ற மணல் வெளி
மலர்கின்றதே………..

எந்தன் உயிரே எந்தன் உயிரே....

படம்: உன்னருகே நானிருந்தால்
இசை: தேவா
பாடியவர்கள்: சித்ரா, கிருஷ்ணராஜ்
வரிகள்: தாமரை


எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்
(எந்தன் உயிரே..)

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னை பார்த்தவுடன்
என்னை தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்
அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க
உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அழுகவில்லை

சின்ன சின்ன கூத்து
நீ செய்யிறதை பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ண பாதம்
நீ வச்சி வச்சி போகும்
அந்த தரையாய் நானிருப்பேன்
கவலைகள் மறக்கவே
கவிதைகள் பிறக்கவே
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்
(எந்தன் உயிரே..)

உன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை
நிற்க வைத்து அடையாளம் நீ கொடுத்தாய்
உன்னை சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பார்த்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்சத் தாலி மின்ன மின்ன கேளி பண்ண
பக்கத்தில் நான் கிடைப்பேன்

கண்ணில் மீனை வச்சி
புத்தும் புது தூண்டில்
போட்டது நீயல்லவா
கள்ளத்தனம் இல்ல
உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நான் அல்லவா
உலகமே காலடியில்
கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகே நானிருந்தால்
(எந்தன் உயிரே..)

எந்தன் வானமும் நீதான்....

படம் : வாழ்த்துகள்

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே
எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உந்தன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி

எந்தன் வாழ்வடி ஒகோ கோ கொ
எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே

நீ நடக்கும்போது உன் நிழலும்
மண்ணில் விழும் முன்பே ஏந்திக்கொள்வேன்
உன் காதலின் ஆழம் கண்டு கண்கள் கலங்குவேன்
உன்னுடய கால் தடத்தில் மழை அடித்தால்
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்
ஒகோ உன்னால் இன்று பெண் ஆனதன் அர்த்தம் புரிந்ததே
ஒகோகோ... உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி ஒகோ கோ கொ

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும்னேதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே
எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உந்தன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே

ஒரே ஒரு வார்த்தையில் கவிதை என்றால்
உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும்
என் பேரைத்தான் யாரும்கேட்டால்
உன் பேர் சொல்கிறேன்
ஒரே ஒரு உடலில் இரு இதயம்
காதலென்னும் உலகத்தில்தான் இருக்கும்
நீ இல்லையேல் நான் இல்லையே நெங்சம் சொல்லுதே
ஒகோகோ உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி ஒகோ கோ கொ

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே
எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உந்தன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே