Saturday, April 18, 2009

காற்று வந்தால் தலை சாயும்

குரல் :பீ.பீ.ஸ்ரீனிவாஸ் - பீ.சுசீலா
இசை: எம்.எஸ்.வீ -டி.கே.ஆர்


காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்
ஆற்றினிலே கரை புரளும்
வெள்ளம்
ஆசையிலே கரை புரளும்
உள்ளம்

ஆடை தொட்டு விளையாடும்
தென்றல்
ஆசை தொட்டு விளையாடும்
கண்கள்

ஒருவர் மட்டும் படிப்பது தான்
வேதம்
இருவராக படிக்க சொல்லும்
காதல்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்

மழை வரும் முன் வானை மூடும்
மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்
மோகம்
ஓடி வரும் நாடி வரும்
உறவு கண்டு தேடி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும்
மானும்

பாடி வரும் பருவ முகம்
பக்கம் வந்து நின்றவுடன்
பாசத்தோடு சேர்ந்து கொள்வேன்
நானும்
நானும்
நானும்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்

அஞ்சி அஞ்சி நடந்து வரும்
அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும்
கன்னம்
கொஞ்சி வரும் வஞ்சி முகம்
கோபுரத்து கலசம் என
அந்தி வெய்யில் நேரத்திலே
மின்னும்

மின்னி வரும் நேரத்திலே
மேனி கொண்ட பருவத்திலே
முன் இருந்தால் தோற்று விடும்
பொன்னும்

உள்ளம்
துள்ளும்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்

No comments:

Post a Comment