Tuesday, March 31, 2009

சுந்தரி கண்ணால் ஒரு சேதி....

படம் : தளபதி

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

வாய்மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய்விரித்துப் பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா?

வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்

தேனிலவுதான் வாட ஏனிந்த சோதனை
வானிலவை நீ கேளு கூறுமென் வேதனை
எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி

நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நானுன் மார்பில் தூங்கினால்

மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ
நீயெனைத் தேடினால்
காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக் கூடும்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

Monday, March 30, 2009

எங்கேயோ பார்த்த மயக்கம்.....

படம் : யாரடி நீ மோகினி

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த‌ நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது

இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து…

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு....

படம்: யாரடி நீ மோகினி
பாடியவர் : கார்த்திக், ரீட்டா
இசை : யுவன்



ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிறபொழுது
தொடு வானத்தை தொடுகிற உணர்வு

ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
நின்றாலும் கால்கள் மிதக்கும்

நடை உடைகள் பாவனைகள் மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா ? இல்லை கடவுளா?
புரியாமல் திணறிப் போனேன்

யாரேனும் அழைத்தால் ஒரு முறைதான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில் உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போவேன்

இது ஏதோ புரியா உணர்வு
இதை புரிந்திட முயன்றிடும்பொழுது
ஒரு பனிமலை ஒரு எரிமலை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்

நதியாலே பூக்கும் மரங்களுக்கு
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா? கொஞ்சம் புரியுமா?
கரையோர கனவுகள் எல்லாம்

உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பிவிட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
திறக்காத கதவுகள் திறக்கும்

தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் கிடையாது
அது புரியலாம் பின்பு தெரியலாம்
அதுவரையில் நடப்பது நடக்கும்

முதல் முதலாக - உன்னாலே உன்னாலே

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ.. தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே

உன்னாலே உன்னாலே விண்ணாள சென்றேனே
உன் முன்னே உன் முன்னே மெய்தாள நின்றேனே
ஒரு சொட்டுக் கடலும் நீ
ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன்
ஹோ ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ.. தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே

ஒரு பார்வை நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் விழுந்தேனே தூங்காமல் வாழ்வேனே
நதி மீது சருகைப்போல் உன் பாதை வருகின்றேன்
கரை தேற்றி விடுவாயோ கதிமோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறி போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ.. தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே
உன்னாலே உன்னாலே விண்ணாள சென்றேனே
உன் முன்னே உன் முன்னே மெய்தாள நின்றேனே

நீ என்பது மழையாக நானென்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும்
அந்த வானிலை சுகமாகும்
சரி என்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர் பார்க்கவில்லை நான்
என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்

உன்னாலே உன்னாலே விண்ணாள சென்றேனே
உன் முன்னே உன் முன்னே மெய்தாள நின்றேனே
ஒரு சொட்டுக் கடலும் நீ
ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன்
ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்

கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா ...

கவிதைகள் சொல்லவா ,
உன் பெயர் சொல்லவா ...
இரேண்டுமே ஒன்றுதான் ஓஹோ ...

ஓவியம் வரையவா ,
உன் கால் தடம் வரையவா ...
இரேண்டுமே ஒன்றுதான் ஓஹோ ...

யார் அந்த ரோஜபூ ,
கண்ணாடி நெஞ்சின் மேல் ,
கல்வீசி சென்றாள் அவள் யாரோ ...

உள்ளம் கொள்ளை போகுதே ,
உன்னை கண்ட நாள் முதல் ,
உள்ளம் கொள்ளை போகுதே , அன்பே என் அன்பே ...

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்
சுற்றுதம்மா இங்கும் என் வாழ்வும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

உண்மையில் என் மனம் மெழுகாகும்
சில இருட்டிற்குதான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனியாய் உருகும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும் இல்லை
அந்த கண்ணாடி நான்தானே
முகமே இல்லை என்னிடம் தான் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

கவிதைகள் சொல்லவா ....


காகிதத்தில் செய்த பூவுக்கும்
என மனதிற்கும் ஒற்றுமை இருக்கிறதோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ?
இரண்டுமே வெளி வர முடியாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்கிறேதே ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

கவிதைகள் சொல்லவா...


Sunday, March 29, 2009

உனக்கென நான் - காதலில் விழுந்தேன்

உனக்கென நான்
எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான்
உயிரென நீ
இருப்பது பிடிக்குதே

உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே

தனி ஒரு நான் தனி ஒரு நீ
நினைக்கவும் வலிக்குதே

இதயத்தை
எதற்காக
எதற்காக
இடமாற்றுகிறாய்
இருக்குமொரு துன்பத்தை
குடி ஏற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த பரிசுகள் தேடிப் பிடிப்பாய்
கசந்திடும் செய்தி வந்தால்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நோய் என கொஞ்சம் படுத்தால்
தாய் என மாறி அணைப்பாய்
உனது காதலில் விழுந்தேன்

அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
நானென நீ
நீ என நான்
இணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
வலித்திட தவிக்குதே
மழைகையில் காற்றோடு
பூகம்பம் வந்தாலும்
உனதுமடி
நான் தூங்கும் வீடகுமே
அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அருகினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மறுப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
மரணமே
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கின்றோம்
மனித நிலை தாண்டி போகிறோம்
இனி நமக்கென்றும்
பிரிவில்லையே
பிரிவில்லையே

எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்

உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
ஹே ஹே ஹே


Saturday, March 28, 2009

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது

Movie :Tamil M.A.
Cast : Jeeva, Anjali
Song : unakkaagaththaane intha
Singer : Yuvan Shankar Raja

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன
அன்பே
உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்
உனக்காக தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன
அன்பே
உன்னோடு நானும் வருவேன்
யார் என்ன சொன்னால் என்ன
அன்பே
உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அற்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ ஸ்ரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

வான் பார்த்த பூமி கலைந்தாலுமே
வரபென்றும் அழியாதடி
தான் பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே
கண்ணாடி மறக்காதடி
மழை வாசம் வருகின்ற நேரமெல்லாம்
உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே
மரணங்கள் வந்தாலும் வாரம் அல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சரித்தல்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ ஸ்ரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காக தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன
அன்பே
உன்னோடு நானும் வருவேன்
யார் என்ன சொன்னால் என்ன
அன்பே
உன்னோடு நானும் வருவேன்

நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே
நினைவென்றும் முடியாதடி
நாம் எடுத்த நிழற்படம் அழிந்தாலுமே
நிஜமென்றும் அழியாதடி
நான் கேட்கும் அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா
நீ இன்றி என் வாழ்க்கை பழுதல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காக தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன
அன்பே
உன்னோடு நானும் வருவேன்
யார் என்ன சொன்னால் என்ன
அன்பே
உன்னோடு நானும் வருவேன்

என்னதான் சுகமோ நெஞ்சிலே

பாடல்: என்னதான் சுகமோ நெஞ்சிலே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
வரிகள்:

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடிவா இன்னாளில்
மோகங்கள் நீ காணவா என்னாளும்
காதல் உறவே

(என்னதான்)

பூவோடு வண்டு புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்
நான் சொல்லும் நேரம் இரு கண்ணீன் ஓரம்
எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான்
இன்பம் வாழும் எந்தன் நெஞ்சம்
தீபம் ஏற்றும் காதல் ராணி
சிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம் இது
காதல் உறவே

(என்னதான்)

தீராத மோகம் நான் கொண்ட நேரம்
தேனாறு நீ வந்து சீராட்டத்தான்
காணாத வாழ்வு நான் கண்ட நேரம்
பூமாலை நீ சூடிப் பாராட்டத்தான்
நீயென் ராணி நாந்தான் தேனி
நீயென் ராஜா நானுன் ரோஜா
தெய்வீக பந்தத்திலே உண்டான சொந்தம் இது
காதல் உறவே

ஒரு காதல் தேவதை.... - மெளனராகம்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜைசெய்ய பிறந்தவன் நானில்லையா
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா
தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது
ஒன்றானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யாருறவு யாரறிவாரோ
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ
பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்
லலலாலலாலலா லாலலலாலா
லலலாலலாலலா லாலலலாலா


Hey சோனா...

Tumhein Pata To Hoga

You must know

Tum Hi Pe Main Fida Hoon

I am infatuated over you

Tumhein Hai Jab Se Chaha

Since I have desired you

Hawaon Mein Udta Hoon

I fly in the breeze

Tum Hi Mere har Pal Mein

You in my every moment

Tum Aaj Mein Tum Kal Mein

You are in today, you are in tomorrow

Hey Shona Hey Shona

Hey Shona Hey Shona

Tumhein Pata To Hoga

You must know

Ke Mere Dil Mein Kya Hai

What is in my heart

Chalo Kahe Deti Hoon

Come, let me say

Kabhi Nahin Jo Kaha Hai

What I have not said before

Tum Hi Mere Har Pal Mein

Tum Aaj Mein Tum Kal Mein

Hey Shona Hey Shona

Hey Shona Hey Shona

Tum Jo Gussa Bhi Karo

When ever you are angry

To Mujhe Pyaar Lagta Hai, Jaane Kyun

Then I feel love for you, don’t know why

Main To Jo Bhi Kahoon

Whatever I say

Tumhein Ikraar Lagta Hai, Jaane Kyun

You feel it as a declaration, don’t know why

Chhodo Bhi Yeh Ada

Leave this pretence

Paas Aake Zara

Come a little closer

Baat Dil Ki Koi, Keh Do Na

Say a little talk from the heart

Hey Shona Hey Shona

Hey Shona Hey Shona

Saari Duniya Ko Chhod Ke Maine Chaaha Hai, Ik Tumhein

Leaving the whole world, I have desired only you

Maine Zindagi Se Maanga Hai To Sirf Maanga Hai, Ik Tumhein

I have requested from life only you

Ab Isi Chah Mein

Now in this desire

Ab Isi Raah Mein

Now on this road

Zindagi Bhar Mere, Tum Ho Na

You are with me life long, aren’t you

Hey Shona Hey Shona

Hey Shona Hey Shona

Tumhein Pata To Hoga

Tumhi Pe Main Fida Hoon

Tumhein Hai Jab Se Chaha

Hawaon Mein Udta Hoon

Tumhi Mere Har Pal Mein

Tum Aaj Mein Tum Kal Mein

Hey Shona Hey Shona

Hey Shona Hey Shona

Hey Shona Hey Shona

Shona Hey Shona

Hey Hey Shona Hey Shona

எனதுயிரே, எனதுயிரே - பீமா

எனதுயிரே, எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்.
எனதுறவே, எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்.
நெடுஞ்சாலையில் படும் பாதம்போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே...

இனி இரவே இல்லை கண்டேன் உன்
விழிகளில் கிழக்கு திசை.
இனி பிரிவே இல்லை அன்பே உன்
உளரலும் எனக்கு இசை.
உன்னை காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்.
கண்ணால் நீயும் அதிலே எழுதிப்போனாய்
நல்ல ஓவியம்.
சிறு பார்வையில், ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்.

மரமிருந்தால் அங்கே என்னை நான்
நிழலென நிறுத்திடுவேன்.
இலை விழுந்தால் ஐயோ என்றே நான்
இருதயம் துடித்திடுவேன்.
இனிமேல் நமது இதழ்கள்
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே...
நெடுநாள் நிலவும் நிலவின்
கலங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே...
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே, நீ என் வாழ்வின் மோட்ச்சமே...


கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ

Film : பாடும் பறவைகள்
Song : கீரவாணி
Singer : S.P.Balasubramaniyam, S.Janaki
Music : Illayaraja

கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை
தனிமயில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி
வா நீ கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே

நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி
தவம் புரியாமலே ஒரு வாரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்
வருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும் தலை ஆணை நனைந்ததே
அதற்கொரு விடை தருவாய்

(கீரவாணி)

புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டை தான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன் பூண் தென்றலாய் மாறினேன்
இந்த கணம் எங்கிலும் ஒரு ஸ்வரம் தேடினேன்
இங்கு உனை பார்த்ததும் அதை தினம் பாடினேன்
மனதில் மலராய் மலர்ந்தேன்
வளருக இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்

(கீரவாணி)




ஒற்றைப் பார்வையிலே - புரட்சிக்காரன்

படம் : புரட்சிக்காரன்
பாடல் : ஒற்றைப் பார்வையிலே
குரல் : ஹரிணி, சிரீனிவாஸ்
இசை : வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து


ஒற்றைப் பார்வையிலே எந்தன் உயிரை குடித்தவளே
கற்றைக் குழல் வீசி என்னை கைது செய்தவளே
தாகம் உனக்கிருந்தும் சற்றே தள்ளி இருப்பதென்ன
தாகம் உனக்கிருந்தும் சற்றே தள்ளி இருப்பதென்ன


செக்கச் செவந்தவரே என்னை சிறை செய்ய வந்தவரே
பள்ளத்து தாமரையை எட்டி பறித்திட வந்தவரே
ஒத்த விரல் பட்டாலும் இந்த பட்டோரம் பத்திக்குமே
ஒத்த விரல் பட்டாலும் இந்த பட்டோரம் பத்திக்குமே


அள்ளி எடுத்திடத்தான் எந்தன் ஆவி துடிக்குதடி
துள்ளி எழுந்துவிடு நான் தொட்டால் கொழுந்துவிடு

நானும் பெண்ணில்லையா எனக்குள் நாணம் இருக்குதய்யா
ஜாதிமுள் வந்து எந்தன் தாவணி இழுக்குதய்யா

முள்ளை ஒடித்தெரிவேன் இந்த முல்லையை அணைத்திருப்பேன்
மரபை உடைத்துவிட்டு உந்தன் மார்பில் குடியிருப்பேன்

செக்கச் செவந்தவரே என்னை சிறை செய்ய வந்தவரே

சின்னஞ்சிறு விரலில் நான் பின்னிக் கிடக்கட்டுமா
கன்னச்சிறு குழியில் நான் என்னை புதைக்கட்டுமா

வண்ணத்தமிழ் மொழியே உன்னிடம் வளைந்து கிடக்கையிலே
சின்னஞ்சிறு பறவை கையில் சிக்காது போய்விடுமா

பூவில் இறங்கட்டுமா ஒரு புரட்சி நடத்தட்டுமா
தேனின் ஆழத்திலே நான் திளைத்துக் கிடக்கட்டுமா


செக்கச் செவந்தவரே என்னை சிறை செய்ய வந்தவரே
கற்றைக் குழல் வீசி என்னை கைது செய்தவளே
தாகம் உனக்கிருந்தும் சற்றே தள்ளி இருப்பதென்ன
ஒத்த விரல் பட்டாலும் இந்த பட்டோரம் பத்திக்குமே

Friday, March 13, 2009

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை... மீரா.

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை


படம்: மீரா.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆஷா போஸ்லே.

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வாவா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வாவா

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும்தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

(ஓ... பட்டர்பிளை...)

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வைரமுத்து
இசை : ஏ.ஆர். ரஷ்மான்

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

(அஞ்சலி)

காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின்
எந்தத்துளி மழைத்துலி
காதலில் அதுபோல நான்
கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம்
பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல்
படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி
என்னுயிர்க் காதலி

(பூவே)

சீதையின் காதல் அன்று
விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று
செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே
இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி
தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து
மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து
உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி
இவள் தலைக்காதலி

பூவே உன் பாதத்தில்
புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு
பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரல் வாழ
கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ
கவிதாஞ்சலி

(அஞ்சலி)

அழகியே உனைப்போலவே
அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன்
அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால்
கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல்
கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு
பிறந்தவளா?
பூவுக்குள் கருவாகி
மலர்ந்தவளா?
அஞ்சலி அஞ்சலி
என்னுயிர்க்காதலி...

(பூவே)