Saturday, March 28, 2009

ஒற்றைப் பார்வையிலே - புரட்சிக்காரன்

படம் : புரட்சிக்காரன்
பாடல் : ஒற்றைப் பார்வையிலே
குரல் : ஹரிணி, சிரீனிவாஸ்
இசை : வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து

ஒற்றைப் பார்வையிலே எந்தன் உயிரை குடித்தவளே
கற்றைக் குழல் வீசி என்னை கைது செய்தவளே
தாகம் உனக்கிருந்தும் சற்றே தள்ளி இருப்பதென்ன
தாகம் உனக்கிருந்தும் சற்றே தள்ளி இருப்பதென்ன

செக்கச் செவந்தவரே என்னை சிறை செய்ய வந்தவரே
பள்ளத்து தாமரையை எட்டி பறித்திட வந்தவரே
ஒத்த விரல் பட்டாலும் இந்த பட்டோரம் பத்திக்குமே
ஒத்த விரல் பட்டாலும் இந்த பட்டோரம் பத்திக்குமே

அள்ளி எடுத்திடத்தான் எந்தன் ஆவி துடிக்குதடி
துள்ளி எழுந்துவிடு நான் தொட்டால் கொழுந்துவிடு

நானும் பெண்ணில்லையா எனக்குள் நாணம் இருக்குதய்யா
ஜாதிமுள் வந்து எந்தன் தாவணி இழுக்குதய்யா

முள்ளை ஒடித்தெரிவேன் இந்த முல்லையை அணைத்திருப்பேன்
மரபை உடைத்துவிட்டு உந்தன் மார்பில் குடியிருப்பேன்

செக்கச் செவந்தவரே என்னை சிறை செய்ய வந்தவரே

சின்னஞ்சிறு விரலில் நான் பின்னிக் கிடக்கட்டுமா
கன்னச்சிறு குழியில் நான் என்னை புதைக்கட்டுமா

வண்ணத்தமிழ் மொழியே உன்னிடம் வளைந்து கிடக்கையிலே
சின்னஞ்சிறு பறவை கையில் சிக்காது போய்விடுமா

பூவில் இறங்கட்டுமா ஒரு புரட்சி நடத்தட்டுமா
தேனின் ஆழத்திலே நான் திளைத்துக் கிடக்கட்டுமா

செக்கச் செவந்தவரே என்னை சிறை செய்ய வந்தவரே
கற்றைக் குழல் வீசி என்னை கைது செய்தவளே
தாகம் உனக்கிருந்தும் சற்றே தள்ளி இருப்பதென்ன
ஒத்த விரல் பட்டாலும் இந்த பட்டோரம் பத்திக்குமே

No comments:

Post a Comment