Saturday, June 27, 2009

சிந்திய வெண்மணி சிப்பியில்

படம் : பூந்தோட்ட காவல்காரன்.

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தச்ச்சு என் பொன்னம்மா
செலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் ஓடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே

சிந்திய வெண்மணி சிப்பியில் .............................

தாய் தனத்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே
காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே
வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
மானுடன் என் மகனே

சிந்திய வெண்மணி சிப்பியில்


ஒரு புன்னகை பூவே

படம் : 12 பி

ஒரு புன்னகை பூவே ,
சிறு பூக்களின் தீவே ,
ம்ம்ம் ல -ல -லா

எங்கயோ போகின்ற மேகம் நிற்குது ,
என் பேரை உன் பேரை
சொல்லி அழைக்குது ,
லவ் பண்ணு , லவ் பண்ணு ,
ஒ ஒ

ஒரு புன்னகை பூவே ,
சிறு பூக்களின் தீவே ,
நீ என்னை மட்டும் காதல் பண்ணு ,
என் வாலிப நெஞ்சம்,
உன் காலடி கெஞ்சும் ,
சிறு காதல் பிச்சை போடு கண்ணு ,
நான் கெஞ்சி கேட்கும் நேரம் ,
உன் நெஞ்சின் ஓரம் ஈரம் ,
எ , ச்சோ அச்சோ ,
காதல் வாராதோ ?

சூரியன் வாசல் வந்து ஐஸ் கிரீம் கொடுக்கும் ,
ஊடாதாமா , வீலாதம்மா ,

சந்திரன் உள்ளே வந்து சாக்லேட் குடுக்கும் ,
சுதாதம்மா , ரீளுதாம்மா ,

உன் படுக்கை அறையிலே ,
ஒரு வசந்தம் வேண்டுமா ?
உன் குளியல் அறையிலே ,
விண்டேர் சீசன் வேண்டுமா ?
நீ மாற சொன்னதும் ,
நான்கு சீசன் உம் மாற வேண்டுமா ?
லவ் பண்ணு ,

எம்பது ஆண்டுங்கள் இளமையும் வேண்டுமா?
மெய்யாகுமா ? மெய்யாகுமா?

சொடக்கொன்று போட்டதும் சொர்க்கம் வேண்டுமா?
மெய்யாகுமா? மெய்யாகுமா?

அட வெள்ளை வெள்ளையாய் ,
ஓர் இரவு வேண்டுமா?
புது வெளிச்சம் போடவே ,
இரு நிலவு வேண்டுமா?

உன்னை காலை மாலையும் ,
சுற்றி வருவது ,
காதல் செய்யவே ,
லவ் பண்ணு ,
ஐயோ பண்ணு !

நீ கெஞ்சி கேட்கும் நேரம் ,
என் நெஞ்சின் ஓரம் ஈரம் ,

ஆ ச்சோ அச்சோ
காதல் வந்தாச்சோ ?

பூவே வாய் பேசும் போது

படம் : 12 பி
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
குரல் : ஹரிஸ் ராகவேந்திரா,மகாலெஷ்மி


பூவே வாய் பேசும் போது
காற்றே ஓடாதே நில்லு
பூவின் பொழி கேட்டுக் கொண்டு
காற்றே நல் வார்த்தை சொல்லு
குளிர் வார்த்தை சொன்னால்
கொடியோடு வாழ்வேன்
என்னைத் தாண்டிப் போனால்
நான் வீழுவேன்
மண்ணில் வீழ்ந்த பின்னும்
மன்றாடுவேன்

(பூவே...)

பூக்களைத் தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
களித்திருப்பேன் அன்பே
(பூக்களை...)

காதலன் ஆணைக்குக்
காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில்
பூத்திருப்பேன்
உன் சுவாசப் பாதையில்
நான் சுற்றி திரிவேன்
(காதலன்...)

என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கின்றாய்
என்ன நான் சொல்வேன்

நீ ஒரு பார்வையால் நெருங்கி விடு என்னை
நீ ஒரு வார்த்தையால் நிரப்பி விடு என்னை
(நீ..)

நேசத்தினால் என்னை கொன்றுவிடு
உன் நெஞ்சுக்குள்ளே என்னை...
என் நினைவு தோன்றினால்
துளி நீரை சிந்திடு
( நேசத்தினால்....)

அடி நூறு காவியம் சொல்லித் தோற்றது
இன்று நீ சொன்னது

பூவே வாய் பேசும் போது...

நீ ஒரு காதல் சங்கீதம்

படம் : நாயகன்
இசை: இளையராஜா
குரல் : மனோ, சித்ரா


நீ ஒரு காதல் சங்கீதம்
வாய்மொழி சொன்னால் தெய்வீகம்


வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்


(நீ ஒரு காதல் சங்கீதம்)


பூவைச் சூட்டும் கூந்தலில்
எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

(நீ ஒரு காதல் சங்கீதம்)


மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

படம் : முதல் இரவு
குரல் : ஜெயசந்திரன், பி.சுசீலா



மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று
ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி
ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்
அடிகின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிகின்ற புது கவிகள்
ஓ .. ஒ .. ஒ ஒ ஒ ……

மஞ்சள் நிலாவுக்கு..

வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு
மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி
காலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம்
இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை
ஓ … ஓ .. ஓ ஓ ஓ

மஞ்சள் நிலாவுக்கு..

Friday, June 12, 2009

இதழில் கதை எழுதும் நேரமிது

படம் : உன்னால் முடியும் தம்பி
குரல் : எஸ்.பி.பாலா, சித்ரா



இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இருகரம் துடிக்குது
தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது

காதல் கிளிகள் ரெண்டு ஜாடைப் பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது
நீரோடை போலே என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே

ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மணமாலை இடும் வேளைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
இதழில் கதை எழுதும் நேரமிது

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணே
அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி

ஆனந்தப் பூ முகம்
அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது

காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பானால் அதைத் தீர்க்கும்
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது


யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ

படம் : சென்னை 600 028


யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி

ஊரை வெள்ளும் தோகை நான்
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

ஓஹோ ஓஓஓ
நின்றாய் இங்கு மின்னல் கீற்று
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றால்
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்

காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்னம் தாங்கி
என்னை வாழ ஆகாது
அன்பேவா.... யே. ஹேஏஏஏ

யாரோ..
ம்ஹாஆ
யாருக்குள் இங்கு யாரோ

ம்ஹ்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி

உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் ஹகொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்

ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆகிவிடும்

காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேந்தான்

ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா.ஆஆஆ ஹோ

யாரோ..
ம்ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..

யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி

என்ன சத்தம் இந்த நேரம்

படம் : புன்னகை மன்னன்
குரல் : எஸ்.பி. பாலா


என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..

(என்ன)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ

(என்ன)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்

(என்ன)

நின்னுக்கோரி வரணும்

படம் : அக்னி நட்சத்திரம்
குரல் : சித்ரா


நின்னுக்கோரி வரணும் வரணும் - இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கேனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே - அனுதினமும்

(நின்னுக்கோரி )

உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது
உன்னோடுனான் ஓயாமல் தேனாற்றிலே நீராடத் நினைக்கையில்

(நின்னுக்கோரி )

பெண்ணல்ல வீணைதான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்
வன்னப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்
கன்னித்தொகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட

(நின்னுக்கோரி )