Saturday, July 25, 2009

மேகம் கருக்குது மழை

படம் : ஆனந்த ராகம்
இசை : இளையராஜா
குரல் : KJ ஜேசுதாஸ், S ஜானகி


மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து
காத்து மழை காத்து
(மேகம் கருக்குது...)
ஒயிலாக மயிலாடும் அலை போல
மனம் பாடும்
(மேகம் கருக்குது...)

தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன
(தொட்டு தொட்டு...)
தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து..
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடைக் குளிரில் வாடுது மனசு
(மேகம் கருக்குது...)

பூவுக்குள்ள வாசம் வச்சான்
பாலுக்குள்ள நெய்யை வச்சான்
(பூவுக்குள்ள..)
கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் பனசு
(கண்ணுக்குள்ள..)
பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
நீ..
நீ வாடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு
(மேகம் கருக்குது...)

பூமாலையே தோள் சேரவா

படம் : பகல் நிலவு
இசை : இளையராஜா
குரல் : இளையராஜா, ஜானகி


பூமாலையே தோள் சேரவா
பூமாலையே
ஏங்கும் இரு
தோள் சேரவா
ஏங்கும் இரு
இளைய மனது
இளைய மனது
இணையும் பொழுது
இணையும் பொழுது
இளைய மனது
தீம்தன தீம்தன
இணையும் பொழுது
தீம்தன தீம்தன
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே
ஏங்கும் இரு
தோள் சேரவா
வாசம் வரும்
பூமாலையே
ஏங்கும் இரு
தோள் சேரவா
வாசம் வரும்


நான் உனை நினைக்காத நா…ளில்லையே
தேனினை தீண்டாத பூ… இல்லையே (தனனா)
நான் உனை நினைக்காத நா…ளில்லையே (என்னை உனக்கென்று கொடுத்தேன்)
தேனினை தீண்டாத பூ…வில்லையே (ஏங்கும் இளங்காதல் மயில்நான்)
தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)
தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெலாம் பழகுவோம் அனுதினம்

பூமாலையே
ஏங்கும் இரு
தோள் சேரவா
வாசம் வரும்
பூமாலையே
ஏங்கும் இரு
தோள் சேரவா
வாசம் வரும்

(லலல லலலா)
கோடையில் வாடாத கோயில் புறா (லலலா)
காமனைக் காணாமல் காணும் கனா (லலலா)
கோடையில் வாடாத கோயில் புறா (ராவில் தூங்காது ஏங்க)
காமனைக் காணாமல் காணும் கனா (நாளும் மனம்போகும் எங்கோ)
விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது (லலலா)
விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
காற்று சுதி மீட்ட காலம் நதி கூட்ட கனவுகள் எதிர் வரும் அணுகுவோம்


பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா (ஏங்கும் இரு)
இளைய மனது ( இளைய மனது )
இணையும் பொழுது ( இணையும் பொழுது )
இளைய மனது ( தீம்தன தீம்தன )
இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே
ஏங்கும் இரு
தோள் சேரவா
வாசம் வரும்
பூமாலையே
ஏங்கும் இரு
தோள் சேரவா
வாசம் வரும்


பூங்கதவே தாழ் திறவாய்

படம் : நிழல்கள்
இசை : இளையராஜா
குரல் : தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
வரிகள் : கங்கை அமரன்



பூங்கதவே தாழ் திறவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாழ் திறவாய்

நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆகா கா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்..ம்ம்.

பூங்கதவே தாழ்......

திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.

பூங்கதவே தாழ்.......


ஊரெல்லாம் உன் பாட்டு

படம் - ஊரெல்லாம் உன் பாட்டு

ஊரெல்லாம் உன் பாட்டு தான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேறெது..
நீ எனைச் சேரும் நாளெது.. ஓஹோ..

உன் பெயர் உச்சரிக்கும் -
உள்ளம் நித்தமும் தத்தளிக்கும் - இங்கு
நீயில்லாது வாழ்விலேது வேனிற்காலம் தான்
என் மனம் உன்வசமே - கண்ணில்
என்றுமுன் சொப்பனமே - விழி
காணும் காட்சி யாவும் உந்தன் வண்ணக்கோலம் தான்
ஆலம் விழுதுகள் போலே
ஆடும் நினைவுகள் கோடி
ஆடும் நினைவுகள் நாளும்
வாடும் உனதருள் தேடி
இந்தப்பிறப்பிலும் எந்தப்பிறப்பிலும்
எந்தன் உயிர் உனை சேரும்

ஊரெல்லாம் உன்.....

சென்றது கண்ணுறக்கம் - நெஞ்சில்
நின்றது உன் மயக்கம் -இங்கு
ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்
உன்னிடம் சொல்வதற்கு - என்னம்
ஒன்றல்ல நூறிருக்கு - அதை
நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்
பாத சுவடுகள் போகும்
பதை அறிந்திங்கு நானும்
கூட வருகின்ற போதும்
கூட மறுப்பதோ நீயும்
உள்ளக்கதவினை மெல்லத்திறந்திங்கு
நெஞ்சில் இடம் தர வேண்டும்

ஊரெல்லாம் உன்.....


நறுமுகையே நறுமுகையே

படம் : இருவர்
குரல் : உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
இசை : AR ரஹ்மான்

நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா....

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா....

மங்கை மான்விழி அம்புக்ள்
என் மார்த்துளைத்ததென்ன ....
பாண்டிநாதனைக் கண்டு என்
மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை

நறுமுகையே..

யாயும் யாயும் யாராகியறோ
னென்று நேர்ந்தததென்ன....
யானும் நீயும் எவ்வழி
அரிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்ததென்ன....
செம்புலம் சேர்ந்த நீர்போல
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா....
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா....

ஆடியில சேதி சொல்லி


படம் : என் ஆசை மச்சான்
குரல் : சித்ரா
இசை : இளையராஜா


ஆடியில சேதி சொல்லி ஆவணியில தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவருதான்
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவருதான்
அழகு மன்னவரு மன்னவருதான்

(ஆடியில சேதி சொல்லி)

சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு

(சேலை மேல)

வீரப் பாண்டித் தேருப் போல பேரெடுத்த சிங்கம்தான்
ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம்தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம்தான்

(ஆடியில சேதி சொல்லி)

பூவுக் கூட நாரு போல பூமி கூட நீருப் போல
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுரவீரன் பொம்மி போல

(பூவுக் கூட)

சேலையோட நூலுப் போல சேர்ந்திருக்கும் பந்தம்தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித் தந்த சொந்தம்தான்

(ஆடியில சேதி சொல்லி)


சந்தைக்கு வந்த கிளி

படம் : தர்மதுரை

சந்தைக்கு வந்த கிளி
சாடை சொல்லி பேசுதடி....
முத்தம்மா முத்தம்மா
பக்கம் வர வெட்கமா....
குத்தாலத்து மானே
கொத்து பூ வாடிடும் தேனே....


சந்தைக்கு வந்த கிளி ....


கானாத காட்சியெல்லாம்
கண்டேனே உன்னழகில்
பூப்போல கோலமெல்லாம்
போட்டாயே உன்விழியில்
மானா மதுரையிலே
மல்லிகப்பூ வாங்கி வந்து
மைபோட்டு மயக்குனியே
கை தேர்ந்த மச்சானே
தாமரையும் பூத்திருச்சி
தக்காளி பழுத்திருச்சி
தங்கமே உன் மனசு
இன்னும் பழுக்கலையே
இப்பவே சொந்தம் கொண்டு நீ
கையில் அள்ளிக்கொள்ளு மாமா


சந்தைக்கு வந்த மச்சான்
சாடை சொல்லி பேசுவதேன்....
சொல்லவா சொல்லவா
ஒன்னு நான் சொல்லவா...
கல்யாணத்த பேசி நீ
கட்ட வேனும் தாலி...

ஆளான நாள் முதலா
உன்னதான் நான் நினைச்சேன்
நூலாகத்தான் எலச்சி
நோயில் தினம் வாடி நின்னேன்
பூ முடிக்கும் கூந்தலிலே
என் மனச நீ முடிக்க
நீ முடிச்ச முடிப்பினிலே
என் உசிரு தினம் துடிக்க
பூவில் நல்ல தேனிருக்கு
பொன்வண்டு காத்திருக்கு
இன்னும் என்ன தாமதமே
மாமனுக்கு சம்மதமோ
இப்பவே சொந்தங்கொள்ளவே
என்னருகில் வா..மா..

சந்தைக்கு வந்த கிளி....

ஏ... பாடல் ஒன்று

படம் : பிரியா


கட்டிவச்சிக்கோ எந்தன்

படம் : என் ஜீவன் பாடுது

ஆலப்போல் வேலப்போல்

படம் : எஜமான்


Friday, July 24, 2009

எங்கிருந்தோ இளங்குயிலின்

படம் : பிரம்மா
குரல் : எஸ்.பி.பாலா
இசை : இளையராஜா



எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விறைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

நீங்காமல் தானே நிழல் போலே நானே
வருவேன் உன் பின்னோடு எந்நாளும் தான்
பூப்போன்ற மனதை பொல்லாத மனதால்
தவறாக எடைப்போட்டு சென்றாலும்தான்
பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது உண்மையானது
நீயும் காணக்கூடும் இங்கும் ஓர் தினம்
இந்த பால் மனம்

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு
மறைத்தாலும் என் கண்கள் ஏமாறுமா
புரியாத புதிராய் விளங்காத விடையாய்
இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா
என்னை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லையே
வேலி மீது குற்றம் சொன்ன தோட்டம் இல்லையே
நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும்
அந்த நாள் வரும்

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விறைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்



Get Your Own Hindi Songs Player at Music Plugin

Sunday, July 19, 2009

பூங்காற்று புதிரானது

படம் : மூன்றாம் பிறை
இசை : இளையராஜா
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்


பூங்காற்று புதிரானது புது வாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புது வாழ்வு சதிராடுது

வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
மரகத கிள்ளை மொழி பேசும் (2)

பூவானில் பொன்மோகம் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்

பூங்காற்று புதிரானது புது வாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புது வாழ்வு சதிராடுது

நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி

என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ

பூங்காற்று புதிரானது புது வாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புது வாழ்வு சதிராடுது


தாலாட்டும் பூங்காற்று

படம் : கோபுர வாசலிலே
இசை : இளையராஜா
குரல் : ஜானகி


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

(தாலாட்டும் பூங்காற்று)

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

(தாலாட்டும் பூங்காற்று)

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா

(தாலாட்டும் பூங்காற்று)


காதல் கவிதைகள் படித்திடும்

படம்: கோபுர வாசலிலே
குரல் : SP பாலசுப்ரமணியம், சித்ரா
இசை: இளையராஜா



காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இது காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்
இதயம் இதம் மாறும் இளமை பரிமாறும்
அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்
இடம் தரும்
(காதல்..)

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்
(காதல்..)

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய் தினம் தினம்
(காதல்..)

தேவதை போல் ஒரு

படம் : கோபுர வாசலிலே
குரல் : தீபன் சக்ரவர்த்தி, மலேசிய வாசுதேவன். மனோ, SN சுரேந்தர்
இசை : இளையராஜா


தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்
தேவதை போல்..

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்
தேவதை போல்..

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்
தேவதை போல்...

Saturday, July 11, 2009

மழை வருது மழை வருது

படம் : ராஜா கைய வச்சா
குரல் : யேசுதாஸ், சித்ரா
இசை : இளையராஜா


மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானாய் உன் மராபிலேய் ஹொய்
வெயில் வருது வெய்யில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேர் அன்பிலேய்
மழை பொல் நீயே.. பொழிந்தாய் தேனே
மழை வருது....

இரவும் இல்லை
பகலும் இல்லை
இனைந்த கையில்
பிரிவும் இல்லை
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
உனது தொளில் நான் பிள்ளை
போலே உறங்க வேண்டும் கண்ணா வா

மழை...


கடந்த காலம்
மறந்து போவோம்
கரங்கல் சேர்த்து
நடந்து போவோம்
உலகமெங்கும் நமது ஆட்சி
நிலமும் வானும் அதற்க்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
உலகமெங்கும் அதற்க்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டு பாடும்
இனிய ரகம் கேட்ப்போம் வா

வெய்யில்...

நிவேதா.......

படம் : நீ பாதி நான் பாதி
குரல் : SP பாலசுப்ரமணியம்
இசை : மரகதமணி



ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
சரிகம ரீக சாரி தாச பாதக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா

சரிகம பதனிசா சனிதபம் மகரிசா
சரிகம பதனிசா சனிதபம் மகரிசா
நி நின்னினி நி நின்னினி நி நின்னினி நிரபா
நி நின்னினி நின்னின்னினி நிவேதா
நி நின்னினி நி நின்னினி நி நின்னினி நிரபா
நி நின்னினி நின்னின்னினி நிவேதா
காசிர ரீ ரீ ரீ
நிசனி தா தா தா
குதாமப க க க
சரிகமபா ரிசரிகசா
கனி சனி சமபக நிவேதா

ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
சரிகம ரீக சாரி தாச பாதக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா

படம் : அழகன்
குரல் : எஸ்.பி.பாலா, சந்தியா
இசை : மரகதமணி


சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனெச்சேன்
நானும்தான் நெனெச்சேன்
ஞாபகம் வரவும்
யோசிச்சா தெரியும்
யோசனை வரல
போங்க நான் விளங்க
தூக்கம் தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்

எந்தெந்த இடங்கள்
தொட்டால் ஸ்வரங்கள்
தூண்டும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித்தா

சொர்க்கத்தில் இருந்து
யாரோ எழுதும்
காதல் கடிதம்
இன்று தான் வந்தது

சொர்க்கம் விண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையின்
பாடிடும் கவிதை
சுகம் தான்

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்

சாதிமல்லி பூச்சரமே

படம் : அழகன்
குரல் : எஸ்.பி.பாலா
இசை : மரகதமணி


சாதிமல்லி பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி
என்னன்னு முன்னேவந்து
கன்னே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம்
இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று
பின் கட்டிலில் தாலாட்டு
சாதிமல்லி பூச்சரமே ...

எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல
ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும்
ஒன்றுதான்
கடுகுபோல் உன்மனம் இருக்கக்கூடாது
கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப் போல் எல்லோரும் என எண்ணோணும்
அதில் இன்பத்தைத் தேடோணும்
சாதிமல்லி பூச்சரமே......

உலகமெல்லாம் உண்ணும்போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு
சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப் பாட்டன்
சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ்நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதிமல்லி பூச்சரமே...

ஆசையக் காத்துல தூது விட்டு

படம் : ஜானி
குரல் : ஜென்சி
இசை : இளையராஜா


ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு
(ஆசைய)

வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில
(ஆசைய)

தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில
(ஆசைய)

Friday, July 10, 2009

மேற்கே மேற்கே மேற்கே தான்

படம் : கண்ட நாள் முதல்



மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே

சுடும் வெயில் கோடைக்காலம்
கடும் பனி வாடைக்காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும்
காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதன் மழைக் காலம் என்றே
நெஞ்சம் சொல்லுதே

ஓ மின்னலும் மின்னலும்
நேற்றுவரை பிரிந்தது ஏனோ?
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத்தானோ

(மேற்கே.....)

கோபம் கொள்ளும் நேரம்
வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
கோபம் தீரும் நேரம்
மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய் தோன்றும்
அதே நிலா

இனி எதிரிகள் என்றே எவரும் இல்லை
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கைபோடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவையில்லையே

(மேற்கே.....)

வாசல் கதவை யாரும்
தட்டும் ஓசை கேட்டால்
நீதான் என்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்போதேல்லாம் தேடும் எந்தன் விழி

இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகை தீண்டும் மேகமோ?
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமா?

(மேற்கே...)

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

படம்: ராமன் தேடிய சீதை
பாடல்: இப்பவே இப்பவே
பாடியவர்கள்: மதுபாலகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்


ம்….ம்…..ம்….ம்…..
ம்….ம்…..ம்….ம்…..


இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

ம்….ம்…..ம்….ம்…..

இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே

ம்….ம்…..ம்….ம்…..

கண்ணை மூடி உன்னைக் கண்டால்
அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்டால்
அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே

இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே……….

வெள்ளச் சேதம் வந்தால் கூட
தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால்
என்ன செய்வது

முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால்
ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன்
நித்தம் யுத்தம் தான்

சொல்லித் தீரா
இன்பம் கண்டு
எந்தன் நெஞ்சு
கூத்தாட‌…

மின்னல் கண்ட
தாழை போல
உன்னால் நானும்
பூத்தாட‌…..

உன்னைக் கண்டேன்
என்னைக் காணோம்
என்னைக் காண
உன்னை நானும்

இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே….
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே…..

எந்தன் வாழ்வில் வந்ததின்று
நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே
செல்ல விருப்பம்

நெஞ்ச வயல் எங்கும் உன்னை
நட்டு வைக்கிறேன்…
நித்தம் அதில் காதல் உரம்
இட்டு வைக்கிறேன்

உன்னைக் காண
நானும் வந்தால்
சாலை எல்லாம்
பூஞ்சோலை….

உன்னை நீங்கி
போகும் நேரம்
சோலை கூட
தார்ப்பாலை…

மண்ணுக்குள்ளே
வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே

கண்ணுக்குள்ள‌ உன்னைக் கண்ட
அப்பவே அப்பவே

கைவளையல் ஓசை கேட்ட
அப்பவே அப்பவே

ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே

என்னமோ செய்தாய் நீ

படம் : காதல்னா சும்மா இல்லை
பாடல் :என்னமோ செய்தாய் நீ
பாடகர்கள் :சுஜாதா ,உதித் நாராயணன்
இசை அமைப்பாளர் :வித்யா சாகர் ,மணி ஷர்மா


என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ
என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ
எதிரில் யாரை பார்க்கும் போதும்
கண்கள் உன்னை தானே தேடும்
கால்கள் தரையில் இறங்கும் போதும்

மனசு பறந்து பார்க்க தோன்றும்
என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ
குடைகள் கையில் இருக்கும் போதும்

மழையில் நனைந்து பார்க்க தோன்றும்
கொஞ்சம் நெருங்கி பார்க்க தோன்றும்
கொஞ்சம் விலகி பார்க்க தோன்றும்

உன்னை பார்க்கும் முன்னே உலகம் சிரியதடி
உன்னை பார்த்த பின்னே உலகம் பெரியதடி
ஜன்னல் திறந்து பார்க்க வைத்தாய்
என்னை உணர்ந்து பார்க்க வைத்தாய்

ஓ ...நீ பார்க்கும் பார்வை ஒரு நாள்
நான் பார்க்கும் பார்வை ஆகும்
எப்படி எப்படி எப்பாடி எனக்குள் வந்தாய்
எந்தன் நெஞ்சை கேட்டு பார்த்தேன்

எத்தனை எத்தனை எத்தனை தடவை கேட்டும்
பதில்கள் இல்லையே
நதியில் மிதக்கும் இலைக்கு எல்லாம்
நதியின் ஆழம் தெரிவதில்லை

காதல் எந்த நிமிடம் பிறக்கும்
கடவுள் உலகம் அறிவதில்லை

என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ


குழந்தை சிரிப்பினிலே உள்ளம் திருடுகிறாய்
மெதுவாய் மயிலிறகாய் மனதை வருடுகிறாய்
காலம் உறைந்து போக வைத்தாய்
கனவில் கரைந்து போக வைத்தாய்

உன் கோலம் முழுதும் பூ பூத்து பூ கோலம் ஆனது உன்னாலே
எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய் எந்தன் நெஞ்சை கேட்டு பார்த்தேன்
எத்தனை எத்தனை எத்தனை எத்தனை தடவை கேட்டும் பதில்கள் இல்லையே
கண்கள் கடிதம் போட்ட பின்னே கிளிகள் பறந்து வருதில்லை
கண்கள் திறந்து பார்த்த பின்னே ஓ ..இதயம் முரண்டு பிடிப்பதில்லை

என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ
கொஞ்சம் நெருங்கி பார்க்க தோன்றும்
கொஞ்சம் விலகி பார்க்க தோன்றும்
கால்கள் தரையில் இருக்கும் போதும்
மனசு பறந்து பார்க்க தோன்றும்