Saturday, September 26, 2009

பாடும் போது நான் தென்றல் காற்று

படம் : நேற்று இன்று நாளை
இசை : MS விஸ்வநாதன்
குரல் : எஸ்.பி.பாலா


பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் ....

மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து ...
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து ...
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் ...

எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும் ...
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும் ...
யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் ...

பொய் சொல்லக்கூடாது காதலி

படம் : ரன்
இசை : வித்யாசாகர்
குரல் : ஹரிஹரன்
வரிகள் : அறிவுமதி


பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி

கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்

பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

பொய் சொல்லக்கூடாது காதலி ...

அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத் தோண்டி பதியம் போட்டுக் கொண்டேன்
கண்டவுடன் எனையே தின்றதடி விழியே
என்னைவிட்டுத் தனியே சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழிச்சுடரே
நட்சத்திரப் பயிரே
ரெக்கை கட்டி வா நிலவே

பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

பொய் சொல்லக்கூடாது காதலி ...

ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணே
நீ ஒற்றைத் துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டே அழகே
நெற்றிமுடி வழியே தப்பிவந்தேன் வெளியே
அடி பொத்திவைத்த புயலே
தத்தளிக்கும் திமிரே
வெட்கம் விட்டு வா நிலவே

நில் என்று கண்டித்தாய்
உள் சென்று தண்டித்தாய்
சொல் என்று கெஞ்சத்தான்
சொல்லாமல் வஞ்சித்தாய்

பொய் சொல்லக்கூடாது காதலி ....

வெண்ணிலவே வெண்ணிலவே

படம் : மின்சார கனவு
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
குரல் : ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள் : வைரமுத்து


வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை ...
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உனை அதிகாலை அனுப்பி வைப்போம்
வெண்ணிலவே..

இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூ ஆகும்
பெண்ணே பெண்ணே
பூலோகம் எல்லாமே தூங்கி போன பின்னே
புல்லோடும் பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவினில் மடிகளில் பிள்ளைகள் ஆவோம்
தாலாட்ட நிலவுண்டு

வெண்ணிலவே..

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு?
இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
பெண்ணே பெண்ணே
பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும்
நான் உன் போன்ற பெண்ணோடு
வெண்ணிலவே..

Monday, September 21, 2009

கண்ணுக்கு மை அழகு

படம் : புதிய முகம்
இசை : ஏ.ஆர்.ரஷ்மான்


கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண் அழகு

இளமைக்கு நடை அழகு,
முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவழகு,
காதல்ர்க்கு நிலவழகு
நிலவுக்கு கரை அழகு,
பறவைக்குச் சிறகழகு
அவ்வைக்குக் கூன் அழகு,
அன்னைக்கு சேய் அழகு..

கண்ணுக்கு...

விடிகாலை விண்ணழகு,
விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்றழகு,
தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆறழகு,
உர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு 'ழ' அழகு,
தலைவிக்கு நானழகு..

கண்ணுக்கு ...


கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
அவரைக்குப் பூ அழகு
அவருக்கு நான் அழகு

மழை நின்ற பின்னாலும்
இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும்
கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண் மீங்கள்
இரவொடு தான் அழகு
இளமாரன் கண்ணுக்கு
எப்பொதும் நானழகு..

கண்ணுக்கு ...

ஆனந்த மஞ்சத்தில்
அவிழ்ந்தாலும் குழல் அழகு
அடாயள முத்ததில்
அழிந்தாலும் பொட்டழகு
பென்னொடு காதல் வந்தால்
பிறை கூட பேரழகு
என்னொடு நீ இருந்தால்
இருள் கூட ஓர் அழகு..

கண்ணுக்கு ...

Sunday, September 20, 2009

ஆசையிலே பாத்தி கட்டி

படம் : எங்க ஊரு காவல்காரன்
இசை : இளையராஜா
குரல் : பி.சுசீலா
வரிகள் : கங்கை அமரன்


ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி..
ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி..
நானா பாடலியே.. நீதான் பாட வச்சே..

வைகையில் வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம் வந்து நீ தந்ததென்ன
சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது...
பொன்னுமணித் தேரு நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி என்னைத் தேடி நீ அங்கே வந்து சேரு
விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு
நீ வாயேன் வழி பாத்து


ஆசையிலே பாத்தி கட்டி

கண்ணுதான் தூங்கவில்லை.. காரணம் தோணவில்லை
பொண்ணு நான் ஜாதி முல்லை பூமாலை ஆகவில்லை
கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்லை
கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி.. நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே


ஆசையிலே பாத்தி கட்டி

வெள்ளி கொலுசு மணி

படம் : பொங்கி வரும் காவேரி
இசை : இளையராஜா
குரல் : அருண்மொழி, சித்ரா


வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகஞ்ஜொல்லி பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேத்ததென்ன

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்
மெல்ல மெல்ல வந்து அணைக்கும்
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச
கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும்
பொன்னி நதிப்போல நானும் உன்ன
பொத்தி பொத்தி எடுக்கட்டுமா
கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா
காத்து காத்து நானும் பூத்துப் பூத்துப் போனேன்
சேந்து பாடும்போது தேரில் ஏறலானேன்
உன் பேரச்சொல்லி பாடி வச்சா ஊருதம்மா தேனே

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகஞ்ஜொல்லி பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேத்ததென்ன

கண்ணத்தொறந்தேன் நெஞ்சில் விழுந்த
உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான்
எண்ணம் முழுதும் பொங்கி வழியும்
வாங்கினது நல்ல வரம்தான்
கண்ணத்தொறக்காம மூடிகிட்டேன்
நெஞ்சில் வச்சு அடச்சுபுட்டேன்
பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டிபுட்டேன்
சாவியத்தான் தொலச்சுபுட்டேன்
உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு
மெழுகப்போல நானும் உருகிப்போனேன் கேட்டு
காலமெல்லாம் கேட்டிடத்தான் காத்திருக்கேன் பாத்து

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகஞ்ஜொல்லி பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேத்ததென்ன

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

மதுர மரிக்கொழுந்து

படம் : எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை : இளையராஜா
குரல் : மனோ, சித்ரா


மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
மறையாத என்னுடைய பாசம்

பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

மதுர மரிக்கொழுந்து...

மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு

சுத்துனா சுத்தி அதை
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி

மதுர மரிக்கொழுந்து ...

வாசலிலே பூசணிப்பூ

படம் : செண்பகமே செண்பகமே
இசை : இளையராஜா
குரல் : ஜானகி , மனோ


வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா நேசத்திலே
என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும்பாலும் பொங்கி வழியுது இப்போது

வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே என் மனசை தச்சதென்ன தச்சதென்ன

பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது
கோலம்போட்டு சாடை சொன்னது நானே
கோடு நமக்கு யாரு போட்டது..
நெஞ்சுக்குள்ளே நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்..
நெத்தியிலே பொட்டுவச்சு உங்களைத்தான் தொட்டுக்கிட்டேன்..
நானும் நீயும் ஒன்னாசேந்தா நாளும் நாளும் சந்தோஷம்..
ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்..

வாசலிலே பூசணிப்பூ...

மீண்டும் மீண்டும் கூடி சேருது பொன்னிஆறு
மோகத்தோடு கூடி பாடுது ஆஆஅ
கேட்டுகேட்டு கிறங்கத்தோணுது உங்க பாட்டு..
கேள்வி போல என்னை வாட்டுது
ஆத்து வெள்ளம் மேட்ட விட்டு
பள்ளத்துக்கு ஓடிவரும்
ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய் பாடிவரும்
ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி
என்னை இப்ப கிள்ளாதே
போதும் போதும் கண்ணால்
என்ன கட்டி இழுக்கற செண்பகமே!

வாசலிலே பூசணிப்பூ...

ராசாத்தி மனசுல

படம்: ராசாவே உன்னை நம்பி
இசை: இளையராஜா
குரல்: மனோ, P சுசீலா


ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது

ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்
இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்

முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும்
முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்
வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலேதான்
முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்
கண்கள் தச்சா தாங்காதையா
நெதமும் உன் நெனப்பு
வந்து வெரட்டும் வீட்டில
உன்னை சேர்ந்தாலும் உன் உருவம்
என்னை வாட்டும் வெளியிலே
இது ஏனோ அடி மானே
அத நானோ அறியேனே..

ராசாத்தி மனசுல..

செங்குருக்க கோலம் வானத்துல பாரு
வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு
சேறும் இள நெஞ்சங்களை
வாழ்த்து சொல்ல கோர்த்தார்களா
ஊருக்குள்ள சொல்லாததை
வெளியில் சொல்லித் தந்தார்களா
வானம் போடுது
இந்த பூமி பாடுது
ஊரும் வாட்டுது இந்த உலகம் வாட்டுது
தடை ஏதும் கிடையாது
அதை நானும் அறிவேனே

ராசாவின் மனசுல..

Saturday, September 19, 2009

உன்னை கண்டேனே முதல் முறை

படம் : பாரிஜாதம்
இசை : தரன்
குரல் : ஹரிசரண், ஸ்ருதி


உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
உன்னை கண்டேனே..
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யயோ.. அச்சம் வருதே
தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யயோ.. சீ என்னவோ பண்ணினாய் நீயே
உன்னை கண்டேனே..

எறிக்கிற மழை இது
குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது
அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது
இனமுள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே..

நிஜமுள்ள பொய் இது
நிறமுள்ள இருது இது
மௌனத்தின் மொழி இது
மரணத்தில் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது
கட்டி வந்த கனவு இது
ஐந்தில் சொல்வது கேள் பெண்ணே

ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும்
உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே
உள்ளே தித்திக்குமே

காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
பெண்ணே நானும் உன் கண்ணை படிப்பேன்
புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ
மெய் சொல்லுதோ
ஓ.. காதல் எனை தாக்கிடுதே
சரிதான் எனையும் அது சாய்த்திடுதே
இரவில் கனவும் என்னை சாப்பிடுதே
பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லையே
உன்னை கண்டேனே..

ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ வருவாய்
கோயில் உள்ளே கண் மூடி நின்றாய்
உன் உருவம் தானே எந்நாளுமே நெஞ்சில் தோன்றுமே

நான் உன்னால் தான் ஸ்வாசிக்கிறேன்
நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்
உயிரை விடவும் உனை நேசிக்கிறேன்
கடவுள் நிலையை நம் கண்ணிலே காத்திடும் காதல்

உன்னை கண்டேனே..

மனசுக்குள் ஏனோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் ஏதோ ஜில் ஜில்
இது சரி தானா நீ சொல் சொல்

Friday, September 18, 2009

பேசா மடந்தையே


படம் : மொழி
வரிகள் : மது பாலகிருஸ்ணன்
இசை : வித்யாசாகர்


பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

இதயம் என்னும் பூப் பறித்தேன்
நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன்
கையில் கொடுத்தேன் கண்ணே
நீ காலில் மிதித்தாய் பெண்ணே

பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

ஏழு நிறங்களை எண்ணி முடிக்கு முன்
வானவில் கலைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மனநிலை கண்டு தெரியுமுன்
வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே

காதலைச் சொல்லி கரங் குவித்தேன்
கண்ணுக்கு வலி என்று கலங்குகின்றாய்
பூஜைக்கு உனக்கு பூப் பறித்தேன்
பூக்களின் கொலை என்று நடுங்குகின்றாய்

வார்த்தைகளால் காதலித்தேன்
ஜாடைகளால் சாகடித்தாய்
மழை நான் கேட்டேன் பெண்ணே
இடி மின்னல் தந்தாய் கண்ணே

பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே

மூங்கில் காட்டிலே தீயும் அழகுதான்
ஆனால் அதை நான் ரசிக்கவில்லை.
ஐயோ இதயம் பொறுக்கவில்லை
கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான்
ஆனால் அதை நான் சுகிக்கவில்லை.
சகியே என் மனம் சகிக்கவில்லை.

உன் சினம் கண்டு என் இதயம்
உடம்புக்கு வெளியே துடிக்குதடி
உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று
என் மனம் நான்காய் உடைந்ததடி

விதை உடைந்தால் செடி முளைக்கும்
மனம் உடைந்தால் புல் முளைக்கும்
தண்டனை என்பது எளிது
உன் மௌனம் …… கொடிது

பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

Wednesday, September 16, 2009

என் வீட்டுத் தோட்டத்தில்

படம் :ஜெண்டில்மேன்
இசை :ஏ ஆர் ரஹ்மான்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சுஜாதா
வரிகள்: வைரமுத்து


என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே

வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌளனங்கள் கூடாது
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது
ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது
ஆசை துடிக்கின்றதே

என் வீட்டுத்...

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போலே சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது
ம்ம்ம்...அனுபவமோ

உன் வீட்டுத்...

உசிலம்பட்டி பெண்குட்டி

படம் : ஜென்டில்மேன்
இசை : ஏ.ஆர்.ரகுமான்
குரல் : ஷாகுல் ஹமீது, சுவர்ணலதா


உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு - உன்
ஒசரம்பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு
கூடமேலே கூடவெச்சு குச்சனூரு போறவளே
மெதுவாகச் செல்லேண்டி - உன்
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதடி
குதிபோட்டு வந்தேண்டி

உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி

கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா
மையா வெக்கும் சாக்க வெச்ச கையா வெப்பே தெரியாதா
அலங்கனல்லூர் ஜல்லிக்கட்டு சேர்ந்துபோனால் ஆகாதா
மாடுபுடிச்சி முடிச்ச கையில் மயிலப் புடிப்பே தெரியாதா
மயிலே மயிலே இறகொண்ணு போடு
தானா விழுந்தா அது உம் பாடு
இறகு எதுக்கடி தொகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும்

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு - நீ
ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளதாச்சி
கூடமேலே கூடவெச்சு குச்சனூரு போறவளே
உருவித்தான் பாக்காதே - என்
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
துருவித்தான் கேட்காதே

உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி
வெடலப்பொண்ணு நுனிநாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு
வேப்பமரத்துக் கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு?
இடுப்புச் செல எடவெளியில் எனக்கு மட்டும் எடமிருக்கு
ஆசைப்பட்ட மாமனுக்கு ஆண்டிப்பட்டி மடமிருக்கு
தணியும் தணியும் தானா தணியும்
தடியால் அடிச்சா கொடியா மலரும்
மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
அதுதான் பெண்ணின் குணம்

உசிலம்பட்டி...

நான் ஏரிக்கரை மேலிருந்து

படம்: சின்ன தாயி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா


நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென் காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப்போன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான் தோணல
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டி வச்சு
தீண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆண பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல

தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்
உங்கிட்டே சேராதோ எம்பாட்ட கூறதோ
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ
உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே
தென்மானை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே
கண்ணலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல

மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ
அக்காளின் பெண்ணுக்கோர் பொற்காலம் வராதோ
கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணுக மாறதோ
மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ
உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான அசைகளை உள்ளார பூட்டிவச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

உயிரே உயிரே அழைத்ததென்ன

படம்: உயிரிலே கலந்தது
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து


உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
உயிரே...

உன் கீதம் எந்தன் காதில் விழுமா?
உன் வானம் எந்தன் பக்கம் வருமா?
கங்கை எந்தன் வாசல் வருமா?
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா
உயிரே....

நீ தோன்றினாய் அடி வானமாய்
நான் வந்ததும் தொலைவானாய்
கண் மூடினேன் மெய் தீண்டினாய்
கை நீட்டினேன் கனவாகினாய்
மலைச்சாலையில் குமிலாகினாய்
விரல் தீண்டினேன் உடந்தோடினாய்
என் தூரத்து விண்மீனே கை ஓரத்தில் வருவாயா?
என்னை ஒரு முறை தொடுவாயா ஒளியே ஏ ஏ ஏ
உயிரே....

காற்றெங்கிலும் உன் கீர்த்தனை
கண்ணீரிலே ஆராதனை
என் தோட்டத்தில் உன் வாசனை
என் ஜீவனில் உன் வேதனை
நான் தேடினேன் என் கண்ணனை
துயர் சூழ்ந்ததே என் கண்களை
நான் வேறெங்கும்யும் மறையவில்லை
என் வேரும் அழிவதில்லை
உன் வானம் முடிவதில்லை
உடலே..

உயிரே....

காற்றே என் வாசல் வந்தாய்

படம் : ரிதம்
இசை : ஏ ஆர் ரஹ்மான்
குரல்: உன்னிகிருஷ்ணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி
வரிகள்: வைரமுத்து
ஆண்டு : 2000


காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
ச்வாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

ஆயிரம் மலர்களே மலருங்கள்

படம் : நிறம் மாறாத பூக்கள்
பாடல் : கவியரசர் கண்ணதாசன்
இசை : இளையராஜா
பாடியவர் : மலசியா வாசுதேவன் ஜென்சி
வெளியான ஆண்டு : 1979


ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ....

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...
ஆயிரம் மலர்களே மலருங்கள்

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ
ஆயிரம் மலர்களே மலருங்கள்

கோடையில் மழைவரும் வசந்த காலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மாலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...
ஆயிரம் மலர்களே மலருங்கள்


தில் தில் தில் மனதில்

படம் : மெல்ல திறந்தது கனவு
குரல் : எஸ்.பி.பாலா, பி.சுசீலா



தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஆஹா தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

வளர்ந்த நாள் முதல் கார்குழலும்
அழைக்குதே உன்னைப் பூச்சூட
மயக்கம் ஏனடி பூங்குயிலே
தவிக்கிறேன் அடி நான் கூட
விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்
கைகள் படாத இடம்தான் இப்போது
ஆசை விடாத சுகம்தான் அப்போது
ஏக்கம் ஏதோ கேட்கும்

ம்ம்ம்

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

ஆ..

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

மழைக்கு ஏங்கிய மாந்தளிதே
உனக்கு நான் சிறு தூறல்தான்
வியர்த்து வாடிய மெய்சிலிர்க்க
உனக்கு நான் மலைச்சாரல்தான்
அடுத்த கட்டம் நடப்பதெப்போ
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ
மாலை இடாமல் வசந்தம் வராது
வேளை வராது பெண் உன்னைத் தொடாது
போதும் போதும் ஊடல்

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஆஹா தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

இரு பறவைகள் மலை முழுவதும்

படம் : நிறம் மாறாத பூக்கள்
குரல் : ஜென்சி
இசை : இளையராஜா


இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன
இது காலம் சொல்லும் கவிதைகள்
வெறும் கானல் நீர்தான் உறவுகள்

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன

பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
புது ராகம் பாடாத பூந்தென்றலே
எங்கெங்கும் இதுபோல சோகங்களே
தீராதோ இது மாறாதோ
கலைந்தது கவிதைகள் ஓராயிரமே

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன
இது காலம் சொல்லும் கவிதைகள்
வெறும் கானல் நீர்தான் உறவுகள்

Saturday, September 12, 2009

குங்கும பொட்டின் மங்கலம்

படம் : குடியிருந்த கோயில்
குரல் : டி.எம்.எஸ், பி.சுசீலா.


குங்குமப் பொட்டின் மங்கலம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

குங்குமப் பொட்டின்....

எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்
ஆ.......
தித்திக்கும் இதழ் மீது மோகம்
தந்ததே மான்தளிர் தேகம்
தந்ததே மான்தளிர் தேகம்
தேகம்....தேகம்......தேகம்
மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம்
தினம் சந்திக்க சந்திக்க இன்பம்
பெண்ணான பெண் என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள் கோடி
கொண்டதே எண்ணங்கள் கோடி
கோடி......கோடி........கோடி

குங்குமப்....

தங்கம் மங்கும் நிறமான மங்கை
அங்கம் எங்கும் ஆனந்த கங்கை
ஜில்லென குலிர் காற்று வீசும்
மெளனமே தானங்கு பேசும்
மெளனமே தானங்கு பேசும்
பேசும்........பேசும்.......பேசும்
மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்
விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்
கற்பனை கடலான போது
சென்றதே பூந்தென்றல் தூது
சென்றதே பூந்தென்றல் தூது
தூது........தூது.......தூது

குங்குமப் பொட்டின்....

விழியே விழியே உனக்கென்ன வேலை

படம் : புதிய பூமி
குரல் : டி.எம்.எஸ், பி.சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வனாதன்.


விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக - நீ
தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம் ....
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களூம் உறவாட
இங்கு நான்கு கண்களூம் உறவாட

விழியே விழியே...

கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம் தருவாயோ ....
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அதுதானா
பாலும் பழமும் தேனும் தினையும்
நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா

விழியே....

காவேரிக் கரையின் ஓரத்திலே
தாலாட்டும் தென்றல் நேரத்திலே
கலந்து பேசிக் கொள்ள வரலாமா
கனியே கொஞ்சம் தரலாமா ...
ஆற்றங்ரை என்ன அவசியமா
அதிலும் சொந்தம் என்ன ரகசியமா
தேதி குறித்து ஊரை அழைத்து
காலம் அறிந்து மாலை அணிந்து
தர வேண்டும் தந்து பெற வேண்டும்

விழியே....

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே

படம் : பார் மகளே பார்
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி


நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே.....

நீரோடும்....

மகளே உன்னை தேடி நின்றாளே மங்கை
இந்த மங்கள மங்கை
வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையில் தந்தை
நான் காதல் என்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலில் மேலே ....
ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... ஆராரோ

நீரோடும்....

குயிலே என்று கூவி நின்றேனே உன்னை
என் குலக்கொடி உன்னை
துனையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே
உன் தோள்களில் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின்
உள்ளமல்லவா
உங்கள் இருமுகமும் ஒருமுகத்தின்
வெல்லமல்லவா
ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... ஆராரோ

நீரோடும்....

Saturday, September 5, 2009

ஆலைய மணியின்


படம் : பாலும் பழமும்


ஆலைய மணியின் ஓசையை
நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவையில்
ஒலி கேட்டேன்
ஆலைய மணியின் ....
உன் இறைவன் அவனே அவனே
என பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே
எனும் தாயின் மொழி கேட்டேன்

ஆலைய மணியின் ....

இளவும் மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான் தேரினிலே ...
ஏழையில் இல்லம் இது என்றான்
இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்

இறைவன் அவனே ...

ஆலைய மணியின் ...

காதல் கோயில் நடுவினிலே
கருனை தேவன் மடியினிலே ...
யாரும் அறியா பொழுதினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

இறைவன் அவனே ...

ஆலைய மணியின் ...

பறக்கும் பந்து பறக்கும்

படம்: பணக்காரக் குடும்பம்
குரல் : டி.எம்.சௌந்தர ராஜன், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி -டி.கே.ஆர்


பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது

பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது

ஓடும் உனை நாடும்
எனை உன் சொந்தம் என்று கூறும்
திரும்பும் எனை நெருங்கும்
உந்தன் பதில் கொண்டு வந்து போடும்
பறக்கும் ...

இது தான் அந்த நிலவோ
என்று முகம் பார்க்கும் வண்ணப் பந்து
இல்லை இது முல்லை
என்று போராடும் கண்ணில் வண்டு
வருவார் இன்று வருவார்
என்று மனதோடு சொல்லும் பந்து
வரட்டும் அவர் வரட்டும்
என்று வழி பார்க்கும் காதல் செண்டு

பறக்கும் ...

முதல் நாள் இரவில் தனியே
என்னை அழைத்தோடி வரும் தென்றல்
இவர் தான் கொஞம் கவனி
என்று இழுத்தோடி வரும் கண்கள்
அருகில் மிக அருகில்
கண்டு அணை மீறி வரும் வெள்ளம்
அடங்கும் அன்று அடங்கும்
இன்று அலை பாய்ந்து வரும் உள்ளம்

பறக்கும்....

அத்தை மகள் ரத்தினத்தை

படம்: பணக்காரக் குடும்பம்

அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?
அத்தை மகள் ....

முத்து முத்துப் பேச்சு, கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா ....
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க
பெண்னழகை விடுவாரா?
பெண்னழகை விடுவாரா?
முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையைக் கெடுப்பாரா ....
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா?

அத்தை மகள்....

கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி
தொட்டுவிட மனமில்லையா....
கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப் பாதி
கருணை வரவில்லையா?
கருணை வரவில்லையா?
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா....
மேடைகளில் நின்று தோழர்களைக் கண்டு
சொல்லாமல் விடுவேனா?

அத்தை மகள்...

இந்த புன்னகை என்ன விலை

படம் : தெய்வத்தாய்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்


இந்த புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
இந்த புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை

எழுதிய கவிதைகள் ஆயிரமோ
எண்ணங்கள் ஊஞ்சலில் போய்வருமோ....
அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ
பாட்டுகள் பாடும் வழக்கமுண்டோ

இந்த புன்னகை...

எந்த பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
எந்த பாவைக்கும் காவல்கள் வேண்டும் ....
எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்
எந்த பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
எந்த நேரமும் நீ இங்கே வேண்டும்
அழகே அருகே வருவேனே....

இந்த புன்னகை...

கண்ணில் பட்டதில் பாதி சுகம்
கையில் தொட்டதில் மீதி சுகம்....
இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தாய்
காலத்தின் காதலை வாழ வைத்தாய்
இவள் மூடிய பார்வையில் மயக்கம்
இதல் மூடிய வார்த்தையில் மௌனம்....
இந்த ஆரம்ப பாடங்கள் படித்தேன்
இதை உன்னிடமெ தான் படித்தேன்
எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
அழகே அருகே வருவேனே

இந்த புன்னகை.....

ஒரு பெண்ணைப் பார்த்து

படம் : தெய்வத்தாய்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்



ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப்
பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப்
பார்த்தேன் மலரில் ஒளியில்லை
ஒரு பெண்ணை ...
அவள் இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் அவள் இல்லை.....


கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயில் ஓசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
கொடி மின்னல்....
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள் ...
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணை ...

கலை அன்னம் போல் அவள் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
கிளை வண்ணம் போல் அவள் தேகம்
இதலில் மதுவோ குறையாது
கலை அன்னம்....
என்னோடு தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை சேர்த்தாள் ....

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணை ...

வண்ணக்கிளி சொன்ன

படம் : தெய்வத்தாய்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல் : டி.எம்.எஸ் & P.சுசீலா
பாடல் : கவிஞர் வாலி


வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ?
வஞ்சிமகள் வாய்திறந்து சொன்ன மொழியோ?....

புள்ளிமயில் புன்னகையில் என்ன மயக்கம்?
அள்ளி அள்ளிக் கொண்டு செல்ல என்ன தயக்கம்? ....

வண்ணக்கிளி ....

போட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ?-அதைத்
தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ? ....
கண்ணிமான மாளிகையில் காவல் நிற்கவா?- அங்கே
காவல் நின்ற மன்னவனின் கைபிடிக்க வா!

வண்ணக்கிளி....

அத்திப் பழக் கன்னத்திலே கிள்ளிவிடவா?- இந்த
ஊரையெல்லாம் நானழைத்து சொல்லி விடவா? ....
அல்லிவிழி துள்ளி விழ கோபம் என்னவோ?- இங்கே
அஞ்சி அஞ்சிக் கொஞ்சுவதில் லாபம் என்னவோ?

வண்ணக்கிளி....

பருவம் போன பாதையிலே

படம் : தெய்வத்தாய்

பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்

காதல் என்றொரு நாடகத்தை
என் கண் வழி மேடையில் நடித்ததில்லை
கற்றுத் தந்தவன் திரு முகத்தை
கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை

பருவம் போன .....

இதழில் வைத்த ஒரு புன்னகையில்
என் இதயத்தை அளந்து விட்டான் ..
இரவில் வந்த பல கனவுகளில்
என் இறைவன் வளர்ந்து விட்டான் ..
எனக்கு எனக்கென்று இருந்த
இளமையை தனக்கென்று கேட்டு விட்டான்
இல்லை இல்லை என்று சொல்ல
முடியாமல் என்னைக் கொடுத்து விட்டேன்
என்னைக் கொடுத்து விட்டேன்

பருவம் போன....

கொடியின் இடையில் ஒரு பாரமில்லை
என் வழியில் நடந்து வந்தேன்
குழந்தை மனதில் ஒரு கலக்கம் இல்லை
என் காலம் கடந்து வந்தேன்
மாலை பொழுதில் இளம் தென்றல தொடாத
மலராய் நான் இருந்தேன்
மன்னன் வந்த அந்த வேலையிலே
அவன் மடியில் ஏன் விழுந்தேன்
அவன் மடியில் ஏன் விழுந்தேன்

பருவம் போன....

இதுவரை நீங்கள் பார்த்த

படம் : பணக்கார குடும்பம்.

இதுவரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காக தானா
இப்படி என்று சொல்லி இருந்தால்
தனியே வருவேனா .....

சொல்லில் விளங்காத எழுத்தில் அடங்காத
சுகத்தை அறிந்தாயோ
தூக்கம் வளராமல் பாக்கி தெரியாமல்
ஏக்கம் அடைந்தாயோ
ஹோய்.....
அதுவரை வந்தால் போதும் போதும்
அடுத்தது என்னம்மா
ஆரத்தி மேலம் மணவரை கோலம்
வருமா சொல்லம்மா

கைதானா இது நெருப்பா
கனிந்துவிட்டால் என்ற நினைப்பா
கைதானா ...
அனுபவம் இல்லாத மனது
கொஞ்சம் அமைதி அமைதி அமைதி

நில்லாதே அந்த நிலவு
வெறும் நினைவில் வருமோ உறவு
நில்லாதே....
சில்லென்ற மனதின் துடிப்பு
கொஞ்சம் அருகே அருகே அருகே

அதுவரை வந்தால்.....

அம்மம்மா இது கொடுமை
நான் அறியாது இந்த புதுமை
அம்மம்மா....
பேச முடியாத பெருமை
இந்த இனிமை இனிமை இனிமை

எங்கெங்கோ நான் பறந்தேன்
ஒரு இளமை விருந்தில் இருந்தேன்
எங்கெங்கோ ...
கண்களை மீண்டும் திறந்தேன்
சுகம் கண்டேன் கண்டேன் கண்டேன்.

இதுவரை நீங்கள்....

நிலா நீ வானம்

படம் : பொக்கிஷம்
இசை : சபேஷ் முரளி
குரல் : விஜய் யேசுதாஸ், சின்மயி
பாடலாசிரியர்: யுகபாரதி


நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

நிலா ....

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிரென்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம்....

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிருக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்னதான் சொல்ல சொல் நீயே
பேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் ....

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே