Saturday, April 18, 2009

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
ஆஹா.. தாழை மடல் சுற்றும் காற்றைக் கண்டேன்
ஓஹோ..தள்ளாடி உள்ளத்தைத் தழுவக் கண்டேன்
எந்தன் வாழை உடல் சற்று வாடக் கண்டேன்
வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன்
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஆஹா .. வஞ்சி நடை சற்று அஞ்சக் கண்டேன்
ஓஹோ..வண்ணக் கனி இதழ் கொஞ்சக் கண்டேன்
ஆஹா ... பிஞ்சு கொடியிடை கெஞ்சக் கண்டேன்
பெண்ணுக்குள் மண்ணோடு விண்ணைக் கண்டேன்
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
ஆஹஹா ஹாஹா...ஆஆஆஆஆஆஆ
ஆஹா மாலைக்கு மாலை மாயம் கண்டோம்
ஓஹோ..வயதுக்கும் மனதுக்கும் நியாயம் கண்டோம்
ஓஹோ..சோலைக் கிளி என்று மாறுகின்றோம்
சொல்லுக்கு சொல் இன்று சேருகின்றோம்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
ஆஹஹாஹா ஆஹாஹாஹா
ஓஹோ ஓஹோ ஒஹோஹோ ஹோஹோ

No comments:

Post a Comment