Saturday, April 18, 2009

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே..

காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருவதினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன
பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து தனியிடம் பார்த்து
தருகின்ற மனதல்லவோ.. தருகின்ற மனதல்லவோ

காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

கைவிரலாலே தொடுவதிலே இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தால் இந்த வையகம் இருண்டதென்ன
செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து மயக்கத்தை கொடுப்பதென்ன
… மயக்கத்தை கொடுப்பதென்ன

காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
லா.. ல..லால்லா..லால்லல்லா……..

No comments:

Post a Comment