Friday, October 16, 2009

ஏதோ மோகம் ஏதோ தாகம்

படம்: கோழி கூவுது
குரல் : கிருஷ்ண சந்தர், ஜானகி
இசை: இளையராஜா

ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே

ஏதோ மோகம்....

தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு

பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

ஏதோ மோகம் ....

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து

அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது

ஏதோ மோகம் ....

No comments:

Post a Comment