Friday, May 22, 2009

தென்றல் உறங்கிய போதும்

படம்: பெற்ற மகனை விற்ற அன்னை.
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா..? காதல் கண்கள் உறங்கிடுமா...
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே
வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

இதய வானிலே இன்ப தனம்? கோடியே ... தனம் கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ... ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

No comments:

Post a Comment